எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், விவசாயம் தொடர்பான மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. 2020 ஆம் ஆண்டிற்கான விவசாயிகள் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்தல்) மசோதா, மற்றும் விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் மசோதா, மற்றும் விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா ஆகியவை குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வேளாண் மசோதாக்களை மாநிலங்களவையில் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமஎ அறிமுகம் செய்தார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதை வரவேற்று ட்வீட் செய்துள்ளார், "இந்த இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்படுவது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான ஒரு சிறந்த பயனுள்ள நடவடிக்கை என்பது நிரூபிக்கப்படும் என ட்வீட் செய்துள்ளார்.
With the passing of two landmark agriculture Bills in Rajya Sabha today, India has cemented the strong foundation for ‘Atmanirbhar Agriculture’.
This is the result of endless dedication and determination of the Govt under the leadership of PM Shri @narendramodi.
— Rajnath Singh (@rajnathsingh) September 20, 2020
மேலும் படிக்க | மத்திய அரசின் விவசாய மசோதாக்களை BJP-ன் கூட்டணிக் கட்சிகளே எதிர்க்கின்றன: MKS
வியாழக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி மூன்று மசோதாக்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் மசோதாக்கள் எனக் கூறினார். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டவை என்றும் அவை விவசாயிகளுக்கு நீண்ட கால பலன்களை கொடுக்கும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்திகாக சிறந்த விலையை பெற்றுத் தருவதை உறுதி செய்வதையும், விவசாய விளைபொருட்களின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும் படிக்க | ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: அக்டோபர் 1 முதல் தமிழகத்தில் அமல்!!