புது டெல்லி: Coronavirus தொற்றுநோயை ஒழிப்பது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்திய மருத்துவர்கள், கோவாக்சினின் தடுப்பூசியை மனித சோதனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது. AIIMS மருத்துவமனையின் நெறிமுறை கமிட்டி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட COVAXIN என்ற கொரோனா தடுப்பு மருந்தை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீதான பரிசோதனை இன்று தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் முதல் கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் (Covaxin) தடுப்பூசியின் முதல் ஷாட் 30 வயது மனிதருக்கு வழங்கப்பட்டது.


தன்னார்வலர் மருத்துவமனையில் இரண்டு மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்படுவார். பின்னர் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, அடுத்த ஏழு நாட்களுக்கு கண்காணிக்கப்படுவார் என்று எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


தடுப்பூசி மனித சோதனைகளுக்காக பல தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்ப பரிசோதனை மற்றும் பிற சோதனைகளுக்குப் பிறகு, தகுதி பெற்ற 30 வயதான ஆரோக்கியமான நபருக்கு வழங்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் (Covaxin trial shot) முதல் டோஸ் இதுவாகும்.


ALSO READ | Big Breaking: நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்


ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின், சமீபத்தில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து மனித பரிசோதனைகளுக்கான அனுமதி பெற்றது.


COVID-19 தடுப்பு மருந்துக்கான முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடத்துவதற்காக மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ICMR) தேர்ந்தெடுத்த 12 இடங்களில் டெல்லி ஒன்றாகும்.


முதலாம் கட்டத்தில், தடுப்பூசி 375 தன்னார்வலர்களுக்கு பரிசோதிக்கப்படும். அவர்களில் 100 பேர் எய்ம்ஸ் நோயிலிருந்து வந்தவர்கள். இரண்டாவது கட்டத்தில், அனைத்து 12 தளங்களிலிருந்தும் சுமார் 750 தன்னார்வலர்கள் உள்ளனர்.


ALSO READ | COVAXIN என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த இந்தியா; மனிதர்கள் மீதான சோதனைக்கு ஒப்புதல்


பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர் எந்த விதமான உடல் பாதிப்பு அல்லது நோய் இல்லாதவராகவும், கோவிட்-19 தொற்று ஏற்படாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் பரிசோதனையில் பங்கேற்கும் நபர் 18 வயதிலிருந்து 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என எய்ம்ஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. 


சோதனையின் முதல் கட்டம் 18 முதல் 55 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான நபர்கள் மீது செய்யப்படும். கர்ப்பம் இல்லாத பெண்களும் முதல் கட்டத்தில் சோதனைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.


இரண்டாம் கட்டத்தில், 750 பேர்கள் மீது செய்யப்படுவார்கள், அவர்கள் 12 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா உருவாக்கிய முதல் உள்நாட்டு தடுப்பூசி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | AIIMS தில்லியில் COVID-19 தடுப்பு மருந்து COVAXIN மனித பரிசோதனை தொடங்குகிறது..!!!