COVID Update: இந்தியாவில் மீண்டும் அதிகரித்தது தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை!!
COVID தொற்றுக்கு ஆளானவர்களில் தற்போது 6,95,509 பேர் சிகிச்சையில் உள்ளனர். 69,48,497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புது தில்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் தினசரி புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 47,000-க்கும் கீழே போனது.
ஆனால், இப்போது தினசரி தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 54,366 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 690 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டட்வர்களின் மொத்த எண்ணிக்கை வெள்ளியன்று 77,61,312 ஆனது.
COVID தொற்றுக்கு ஆளானவர்களில் தற்போது 6,95,509 பேர் சிகிச்சையில் உள்ளனர். 69,48,497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,17,306 பேர் தொற்றுநோய்க்கு எதிரான போரில் தோல்வியுற்று இறந்தனர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த பாசிடிவிடி ரேட் 7.81 சதவீதமாகவும், தினசரி அளவு 3.8 சதவீதமாகவும் உள்ளது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவான மற்றும் பரவலான சோதனைகள் நடந்து வருகின்றன.
மீட்பு விகிதம் (Recovery Rate) 89.53 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.51 சதவீதமாகவும் இருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: Covaxin: மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த பாரத் பயோடெக்கிற்கு DCGI அனுமதி
42,831 இறப்புகள் உட்பட மொத்தம் 16,25,197 பேர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக உள்ளது. இதைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தரவுகளின்படி, இந்தியா வியாழக்கிழமை ஒரே நாளில் 14,42,722 மாதிரிகளின் சோதனைகளை நடத்தியது. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கையை 10,01,13,085 ஆக உயர்ந்துள்ளது.
"COVID-19 தொற்றுக்கான 10 கோடி பரிசோதனைகள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது. ICMR, சோதனைக்கான அணுகலை அதிவேகமாக அதிகரிக்கச் செய்து வருகிறது. தொற்றுநோய்களை வெற்றிகரமாக சோதிக்கவும், கண்காணிக்கவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் பரவலான இந்த சோதனைகள் உதவியுள்ளன. நாட்டில் கோவிட் -19 நிலைமையை திறம்பட நிர்வகிக்க இது வழிவகுத்தது” என்று ICMR கூறியது.
ALSO READ: கொரோனாவால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பைக் குறைக்க CBD உதவும்: ஆய்வு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR