ஏறக்குறைய ஒரு வார கடின உழைப்புக்குப் பிறகு ஒரு நாள் ஓய்வு என்பது நாம் அனைவரும் விரும்பும் ஒன்று தான். ஆனால், பண்ணை விலங்குகள் பற்றி யாராவது நினைத்து பார்த்த்துண்டா... பெரும்பாலான இடங்களில் பல நாட்கள்  தொடர்ந்து வேலை வாங்கப்படுகின்றனர். ஆனால், ஜார்க்கண்டில் உள்ள சுமார் கிராமங்களில், மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு வாரந்தோறும் விடுமுறை அளிக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லடேஹர் என்ற பகுதியில் உள்ள 12 கிராமங்களில் பசுக்கள், எருமை மாடுகள் ஆகியவற்றுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கும் பழக்கத்தை கடந்த பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


பசுக்கள் மற்றும் எருமைகளிடம் விடுமுறை நாளன்று பால் கறப்பதில்லை. நல்ல உணவுகள் கொடுக்கப்படுகின்றன. அவைகளிடம் எந்த வேலையும் வாங்கப்படுவதில்லை. அது ஓய்வுக்கான நாள். வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு நாள் ஓய்வு கொடுத்தால், விலங்குகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இந்த நடைமுறையானது இப்பகுதியில் உள்ள அனைத்து கால்நடை உரிமையாளர்களாலும் பின்பற்றப்படுகிறது மற்றும் கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை தங்களுக்கு நியமிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் வேலை செய்ய வைத்தால் அல்லது பால் கறந்தால் அது பாவமாக கருதப்படுகிறது.


மேலும் படிக்க | என்ன ராசிப்பா இவரு... 2 மனைவிகளுடன் டைம் டேபிள் போட்டு குடும்பம் நடத்தும் நபர்!


தினந்தோறும் மாடுகளிடம் பால் கறப்பது மற்றும் வேலை வாங்குவது காரணமாக அவை சோர்ந்து போகின்றன என்றும் எனவே வாரம் ஒரு முறை விடுமுறை அளித்து வருவதாகவும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 


ஜார்கண்டின் குறிப்பிட்ட 12 கிராமங்களில் உள்ள மாடுகளுக்கு வாரநாட்களின் வியாழனன்று ஓய்வு அளிக்கும் வழக்கம் இந்த பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என்றும் அன்றைய தினம் மாடுகளிடம் எந்தவித வேலையும் வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். எத்தனை அவசரமாக இருந்தாலும் விடுமுறை தினத்தில் மாடுகளை வேலை வாங்குவதில்லை என்றும் வாரம் ஒரு நாள் ஓய்வு எடுப்பதால் மாடுகள் புத்துணர்ச்சி அடைகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | புதிய முதலீடு திட்டம்... காதலில் தோற்றால் கை நிறைய பணம் - இதோ முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ