புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயணித்த பயணிகளின் கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர் தரவுகள் கசிந்துள்ளதாக இந்திய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தரவு பாதுகாப்பு சம்பவம் குறித்து விசாரிப்பதாகவும், சமரசம் செய்யப்பட்ட சேவையகங்களைப் பாதுகாப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. தரவு பாதுகாப்பு கசிவு தொடர்பான விஷயத்தில், நிபுணர்கள் தற்போது பணியாற்றி வருவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.



கிரெடிட் கார்டு வழங்குநர்களுடன் தரவு கசிவு பற்றி தொடர்பில் இருப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


Also Read | மதிய உணவில் சாப்பிட ஏற்றது எது? தவிர்க்க வேண்டியவை எவை?


உலகளாவிய தரவு கசிவால், பிற சர்வதேச விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட சிட்டா பிஎஸ்எஸ் (SITA PSS) அமைப்பு சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டது.


அப்போது பயணிகளின் தனிப்பட்ட தரவுகள் கசிந்தன. பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை சேமிப்பதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடையது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த சைபர கிரைம் தாக்குதலால் உலகம் முழுவதும் சுமார் 4,500,000 பேரின் தரவுகள் கசிந்துள்ளன. இது தொடர்பாக ஏர் இந்தியா விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Also Read | Benefits of Ragi: பாலை விட 3 மடங்கு கால்சியம் எதில் இருக்கிறது தெரியுமா?


“2011 ஆகஸ்ட் 26 முதல் 2021 பிப்ரவரி 3 வரை பதிவு செய்யப்பட்ட தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ளன. பயணியின் பெயர், பிறந்த தேதி, தகவல் தொடர்பு, பாஸ்போர்ட் தகவல், பயணச்சீட்டுத் தகவல், 'ஸ்டார் அலையன்ஸ்' மற்றும் 'ஏர் இந்தியா' விமானங்களில் அடிக்கடி பயணிக்கும் பயணிகளின் தரவு ஆகியவை அடங்கும் (ஆனால் passwords தொடர்பான தரவுகள் கசியவில்லை) கிரெடிட் கார்டுகளின் தரவுகள் கசிந்தாலும், அதன் சி.வி.வி (CVV) அல்லது சி.வி.சி (CVC) எண்கள் தரவு செயலியில் இல்லாததால் அவை கசியவில்லை”.


இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இ மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:


இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


Also Read | உடலை பொன்னிறமாக்கும் பொன்னாங்கண்ணி கண்களுக்கு ஒளியூட்டும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR