உங்கள் வீட்டிற்கு விருந்தாளி வந்தால் பலரும் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். அதேபோன்று, நீண்ட நாள் பார்க்காத உறவினர், திடீரென ஒரு ஞாயிற்றுகிழமை காலையில் உங்கள் வீட்டு வாசலில் நின்றால் நீங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவீர்கள் அல்லவா... ஆனால், குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டிற்கு வந்த ஒரு அழையா விருந்தாளியை பார்த்து வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி கலந்த பயத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தின் சொஜித்ரா நகரில் கரகுவா என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் பிக்பாய் ரத்தோட் என்பவரின் வீட்டின் கழிவறையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று (அக். 9) முதலை ஒன்று வந்துள்ளது. அதை பார்த்த அவரின் குடும்பத்தினர். அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த முதலை அருகில் இருந்த குளத்தில் இருந்து அங்கு வந்திருக்கலாம் என கூறப்பட்டது. மேலும், முதலை அங்கிருந்து நீண்ட நேரமாக செல்லாததால், அவர்களால் தங்களின் காலை கடனை நிம்மதியாக கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். 


மேலும் படிக்க | ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி கோவிலில் வசித்த ‘சைவ’ முதலை இறைவனடி சேர்ந்தது!