பிபோர்ஜாய் புயலால் எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு? தமிழகத்தில் 5 நாட்கள் மழை
Cyclone Biparjoy IMD Alert: இந்தியா, ஓமன், ஈரான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அரபிக்கடலை ஒட்டியுள்ள நாடுகளில் `பிபோர்ஜாய்` புயலால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படுமா? வானிலை மையத்தின் விரிவான கணிப்பு
நியூடெல்லி: அரபிக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. 'பிபோர்ஜாய்' என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல், தற்போது கோவாவுக்கு 820 கிலோமீட்டர் மேற்கில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 48 மணி நேரத்தில் வலுப்பெற்று பிபோர்ஜாய் புயல் வடக்கு மற்றும் வடகிழக்கை நோக்கி நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
'பிபோர்ஜாய்' புயலின் தாக்கத்தினால், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 36 மணி நேரத்தில், பிபோர்ஜாய் (Biparjoy) படிப்படியாக வலுவடையும் மற்றும் அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்திய கடற்கரையிலிருந்து விலகி இருக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பைபார்ஜாய் சூறாவளி அப்டேட்ஸ்
கோவாவிற்கு மேற்கே 850 கிமீ, மும்பைக்கு தென்மேற்கே 880 கிமீ, போர்பந்தருக்கு 890 கிமீ தென்-தென்மேற்கே மற்றும் கராச்சிக்கு தெற்கே 1170 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், அடுத்த 3 நாட்களில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிபோர்ஜாய் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, குஜராத்தின் கடலோர போர்பந்தர் மாவட்டத்திலிருந்து தென்-தென்மேற்கே 900 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்ததால், மீனவர்கள் ஆழ்கடல் மற்றும் துறைமுகங்களில் இருந்து கடற்கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், தொலைதூர எச்சரிக்கை சமிக்ஞையை (DW II) ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதாக பபிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
"சூறாவளி காரணமாக, ஜூன் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் காற்றின் வேகம் 45 முதல் 55 வரை உயரக்கூடும். அதிகபட்சமாக காற்றின் வேகம் 65-நாட் குறியைத் தொடலாம். இந்த சூறாவளி தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். அனைத்து துறைமுகங்களும் தொலைதூர எச்சரிக்கை சமிக்ஞையை ஏற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன" என்று அகமதாபாத்தில் உள்ள ஐஎம்டியின் வானிலை மைய இயக்குனர் மனோரமா மொஹந்தி தெரிவித்ததை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்றுத் தொடங்கியது. வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதாக தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழையால், அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவின் பெரும்பாலான பகுதிகள், தமிழகத்தின் சில பகுதிகள், கர்நாடகா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பருவமழை பெய்யும் என ஐஎம்டி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தற்போது கோவாவில் இருந்து மேற்கு-தென்மேற்காக 860 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள ‘'பிபோர்ஜாய்' புயலின் தாக்கத்தினால், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும், இந்த புயல் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இருந்தபோதிலும், இந்தியா, ஓமன், ஈரான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அரபிக்கடலை ஒட்டியுள்ள நாடுகளில் 'பிபோர்ஜாய்' புயலால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படாது என்று IMD கணித்துள்ளது.
மேலும் படிக்க | நீர்த்துப் போகும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்! பிரிஜ் பூஷன் தவறு செய்யவில்லை?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ