நீர்த்துப் போகும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்! பிரிஜ் பூஷன் தவறு செய்யவில்லை?!

Sexual harassment case On WFI chief: இந்தியாவின் மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது பொய்யான பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது: மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 9, 2023, 10:28 AM IST
  • பிரிஜ் பூஷன் சிங் மீது மீது பொய்யான பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு?
  • இந்தியாவின் மல்யுத்த அமைப்பின் தலைவர் மீதான வழக்கில் திருப்பம்
  • முன்பகையால் தவறான புகார் அளித்தோம்! மைனரின் தந்தை பகிரங்கமாக ஒப்புதல்
நீர்த்துப் போகும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்! பிரிஜ் பூஷன் தவறு செய்யவில்லை?! title=

நியூடெல்லி: இந்திய மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் கடந்த ஆறு மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்தியாவில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு பொய்யானது என  மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை தெரிவித்துள்ளது WFI தலைவருக்கு எதிரான வழக்கை பலவீனப்படுத்துகிறது.

டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக இரு நாட்களுக்கு முன்னர் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அறிவித்திருந்தனர்.

அதற்கு அடுத்த நாள் (2023, ஜூன் 8) வியாழனன்று, இந்தியாவின் மல்யுத்த அமைப்பின் தலைவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார் வேண்டுமென்றே செய்யப்பட்டது, அதில் உள்நோக்கம் இருப்பதாக மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தங்கள் மகளுக்கு அநீதி இழைத்ததான தவறான புரிதலின் பேரில், பிரிஷ் பூஷன் சிங்கை பழிவாங்க வேண்டும் என்பதே இந்தப் புகாரின் நோக்கம் என்று மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை கூறியது பல்வேறு கேள்விகளையும், சநதேகங்களையும் எழுப்புகிறது.

மேலும் படிக்க | Wrestlers Protest: மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தும் - காரணம் என்ன?

அவர் ஏன் இப்போது தனது கருத்தை மாற்றிக் கூறுகிறார் என்று கேட்ட PTI செய்தி நிறுவனத்திடம் பதிலளித்த அவர், "நீதிமன்றத்தில் சொல்வதற்கு முன்னதாக இப்போது உண்மை வெளிவருவது நல்லது" என்று நினைத்ததாக கூறினார்.

"கடந்த ஆண்டு எனது மகளின் தோல்விக்கு (ஆசிய U17 சாம்பியன்ஷிப் சோதனைகளில்) நியாயமான விசாரணையை அரசாங்கம் உறுதியளித்துள்ளது, எனவே எனது தவறைத் திருத்துவது எனது கடமையாகும்" என்று அவர் மேலும் கூறினார்.

WFI தலைவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்குள் பார்க்கப்படும் என்று இந்திய மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் எதிர்ப்பு மல்யுத்த வீரர்களுக்கு உறுதியளித்த ஒரு நாள் கழித்து மைனர் வீராங்கனையின் தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த கருத்தாஅல், வழக்கு கணிசமாக பலவீனமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | FIR: பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான எஃப்.ஐ.ஆர் சொல்லும் பாலியல் குற்றச்சாட்டுகள்

மைனர் மல்யுத்த வீரரின் தந்தை மீது ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரிஜ் பூஷன் சரண் சிங், போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர். ஜூன் 15க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. அதன் பிறகு தேவைப்பட்டால் பேசுவேன்; நான் இப்போது எதுவும் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை," என்று தெரிவித்தார்.

பல புகழ்பெற்ற இந்திய மல்யுத்த வீரர்கள் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருவதால், WFI தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மல்யுத்த அமைப்பின் தலைவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இளம் மல்யுத்த வீரரின் புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது.

17 வயதுக்குட்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் ட்ரெய்ல்களில் வேரூன்றிய பகை
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீரர்களுக்களின் விரோதத்திற்கான காரணத்தை, மைனரின் தந்தை மேலும் விளக்கினார். அதற்குக் காரணமான நிகழ்வுகளை விரிவாகச் சொன்னார்.

அவரைப் பொறுத்தவரை, பகைமை 2022 லக்னோவில் நடந்த 17 வயதுக்குட்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் ட்ரெய்ல்ஸில் இருந்து உருவானது, அங்கு இளம் மல்யுத்த வீராங்கனை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

நடுவரின் முடிவுக்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இறுதிப் போட்டியில் நடுவரின் முடிவால் தனது குழந்தையின் ஒரு வருட கடின உழைப்பு வீணாகிவிட்டதால் தனக்கு கோபம் ஏற்பட்டதாக மைனரின் தந்தை தெரிவித்தார்.

மேலும் படிக்க | Accident Video: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நடந்தபோது ரயிலுக்குள் என்ன நடந்தது? வீடியோ வைரல்

"இறுதிப் போட்டியில் நடுவரின் முடிவால் எனது குழந்தையின் ஒரு வருட கடின உழைப்பு பாழடைந்துவிட்டது என்ற ஆத்திரத்தில் நான் நிரம்பினேன், நான் பழிவாங்க முடிவு செய்தேன்," என்று அவர் கூறினார்.

மைனர் மல்யுத்த வீராங்கனையை பாலியல் சீண்டல் செய்தது உட்பட அனைத்து பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் பிரிஜ் பூஷன் சரண் சிங் கடுமையாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தேர்தல்கள் ஜூன் மாத இறுதிக்குள் நடத்தப்படும் நிலையில், மல்யுத்த வீரர்களின் போராட்டம் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மல்யுத்த வீரர்களின் போராட்டத்தால் நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதோடு, ஐக்கிய உலக மல்யுத்தம் (UWW) இந்தியாவின் மல்யுத்த அமைப்பை இடைநீக்கம் செய்வதாக மே 30 அன்று தெரிவித்ததும் முக்கியத்துவம் பெறுகிறது..

மேலும் படிக்க | ஆணாதிக்கம் வெறுக்கப்பட வேண்டியது: கேரள உயர் நீதிமன்றத்தை கூற வைத்த ரெஹானா ஃபாத்திமா யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News