எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், ஆந்திரா அரக்கு தொகுதியில் தந்தையை எதிர்த்து மகள் போட்டியிடவுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கு தொகுதியில், மத்திய மந்திரியாக இருந்த தந்தையை எதிர்த்து மகளே களத்தில் நிற்கிறார்.


மத்தியில், மன்மோகன் சிங் அரசில் மலைவாழ் பழங்குடியினர் விவகாரம், பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கேபினட் மந்திரியாக இருந்தவர் கிஷோர் சந்திரதேவ் (வயது 72).


சென்னை கிறித்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 6 முறை MP பதவி வகித்த இவர் கடந்த மாதம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.


இதனையடுத்து அவருக்கு அரக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வழங்கி உள்ளார். இந்நிலையில் அரக்கு தொகுதியில் அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என காங்கிரஸ் கட்சி சிந்தித்து, அதே கிஷோர் சந்திரதேவின் மகளும், சமூக சேவகியுமான சுருதிதேவியை வேட்பாளர் ஆக்கிவிட்டது.


ஆக தந்தை கிஷோர் சந்திரதேவை எதிர்த்து மகள் சுருதிதேவி போட்டியிட தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது.  அதவேலையில் இத்தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, கோடட்டி மாதவியை நிறுத்தி இருக்கிறது. எனவே மும்முனைப்போட்டி நிலவுகிறது.