டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் டெல்லியின் வளர்ச்சிக்கு மத்திய மற்றும் டெல்லி அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூட்டத்திற்குப் பிறகு, முதல்வர் கெஜ்ரிவால் மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது., இந்த சந்திப்பு மிகவும் சிறப்பானது. மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி-யுடன் நடைப்பெற்ற இந்த சந்திப்பு, மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள சந்திப்பு. டெல்லி தொடர்பான பல விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. டெல்லியின் வளர்ச்சிக்கு நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


"இது ஒரு நல்ல கூட்டம், ஒரு நல்ல சூழ்நிலையில் நடைபெற்றது. நாங்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்தினோம். டெல்லியின் வளர்ச்சிக்கு மத்திய அரசும் டெல்லி அரசும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டோம். நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


அவர்கள் சந்திப்பின் போது ஷாஹீன் பாக் விவகாரம் குறித்து விவாதித்தீர்களா என்று கேட்டதற்கு, முதல்வர், “அது குறித்து எந்த விவாதமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.


முதல்வர் கெஜ்ரிவால் பிப்ரவரி 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்ற பின்னர் இருவரும் முதல் முறையாக தற்போது சந்தித்துள்ளனர். "இது ஒரு மரியாதைக்குரிய அழைப்பு. டெல்லி அரசாங்கத்தை சுமுகமாக நடத்துவதற்கு அவர் மையத்தின் ஒத்துழைப்பை நாட வேண்டும்" என்று டெல்லி அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான IANS-ஸிடம் தெரிவித்துள்ளார்.


மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கெஜ்ரிவால், டெல்லிக்கு முழு மாநில உரிமை கோரி வருகிறார். சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விவகாரத்தில் அவர் பெரும்பாலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளார் என்பது நாம் நினைவில்கொள்ள வேண்டிய ஒன்று.