COVID-19: தில்லியில் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்ட லாக்டவுன்
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், இன்று 4 லட்சம் புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை (Corona Second Wave) தொடங்கி, இது வரை இல்லாத அளவில், இன்று 4 லட்சம் புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தேசிய தலைநகர் தில்லியிலும் (Delhi) சனிக்கிழமை காலை 27,000 க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்று பாதிப்புகள் பதிவாகின. கடந்த 24 மணி நேரத்தில் 375 இறப்புகள் பதிவாகியுள்ளன. தொடர்ச்சியாக 13 வது நாளாக, ஒரு நாளைக்கு 20,000 க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.
அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்று பாதிப்புகளுக்கு மத்தியில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்து, டெல்லியில் இன்னும் ஒரு வாரத்திற்கு லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தற்போதைய லாக்டவுன் ஏப்ரல் 25 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு முடிவடைவதாக இருந்த லாக்டவுன், தற்போது மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்
லாக்டவுன் போது, மருந்துக் கடைகள், காய்கறி கடைகள், மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்படும், ஆனால் கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் வேண்டும்.
தில்லியில், தற்போது, சிகிச்சையில் உள்ள தொற்று நோயாளிகளின் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆகும். இது கடந்த ஆண்டின் நவம்பர் மத்தியில், பதிவான, 44,000 என்ற அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையை இந்தியா எதிர்த்துப் போராடுகிறது. மக்கள் விழி பிதுங்கி என்ன செய்வதென்று புரியாமல் திகைக்கும் அளவுக்கு தினசரி பாதிப்புகளும் இறப்புகள் அதிகபட்ச அளவில் பதிவாகின்றன.
ALSO READ | தினமும் 1000 MT மருத்துவ ஆக்ஸிஜனை இலவசமாக வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR