டெங்கு பாதிப்பு குறித்து பார்வையிட சென்ற மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மீது இளைஞர் ஒருவர் மை வீசியதாள் பரபரப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க்கிழமை பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (PMCH) டெங்கு நோயாளிகளைப் பார்வையிடும்போது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மீது ஒருவர் மை வீசினார். அண்மையில் பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல டெங்கு நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


மத்திய மந்திரி PMCH-யை விட்டு வெளியேறியவுடன், மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளில் ஒருவரின் உறவினர், அவர் மீது மை வீசினார். வெள்ள நிலை தொடர்பாக அரசாங்கத்தின் செயலற்ற தன்மை குறித்து அவர் மிரட்டப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இதை அடுத்து உடனடியாக காரில் ஏறிய அமைச்சர் அஸ்வினி சவுபே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 



இது குறித்து அமைச்சர் கூறுகையில், பொது மக்கள், ஜனநாயகம் மற்றும் ஜனநாயகத்தின் தூண் மீது மை வீசப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மை வீசிய நிஷாந்த்ஜா, டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் எம்பி பப்பு யாதவின், மதச்சார்பற்ற அதிகார் கட்சியை சேர்ந்தவன். டெங்கு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மை வீசியதாக தெரிவித்தார். ஆனால், நிஷாந்த் ஜா, தங்களது கட்சியை சேர்ந்தவர் இல்லை என பப்பு யாதவ் கூறியுள்ளார்.