திருவனந்தபுரம்: பெண்களின் சபரிமலை என போற்றப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா விமர்சையாக நடைப்பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். வருடாந்தோறும் மாசி மாதம் பொங்கல் திருவிழா விமர்சையாக நடைப்பெறும்.


சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லாத படசத்தில், இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இதனால் இங்கு வருடம்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் ஒன்றாக இணைந்து பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று மாசி பௌர்னமி முன்னிட்டு பொங்கல் வைக்கப்பட்டது. ஆலயத்தை சுற்றி உள்ள 15 கி.மீ தூரம் வரை பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.