காக்பிட்டில் தோழியை உபசரித்த விமானி... ஏர் இந்தியாவுக்கு DGCA நோட்டீஸ்!
விமானியின் பெண் நண்பர் விமானி இருக்கு காக்பிட் அறைக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) ஏர் இந்தியாவுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் மொத்தமாக வாங்கிவிட்ட நிலையில், ஏர் இந்தியாவை வாங்கியதில் இருந்தே பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது டாடா குழுமம். மேலும் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 470 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம். அனால், சமீப காலங்களாக தவறான காரணங்களுக்காக அடிக்கடி செய்திகளில் இடம் பெறுகிறது ஏர் இந்தியா நிறுவனம். விமானத்தில் பயணிகள் சிறுநீர் கழித்த பிரச்சனை, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் உட்பட சில செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன.
இந்நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) ஏர் இந்தியாவுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 27 அன்று துபாய்-டெல்லி விமானத்தின் போது விமானியின் பெண் நண்பர் விமானி அறைக்குள் நுழைந்த சம்பவத்தை சரியான நேரத்தில் தெரிவிக்காததற்காக ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சனுக்கு DGCA காரணம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த செய்தி வெளியானதை அடுத்து இது விவாதப் பொருளாக மாறியது. தற்போது இதை கவனத்தில் கொண்டு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. DGCA-வின் நடவடிக்கை மற்றும் அதன் பின்னணியில் உள்ள சம்பவம் பற்றி தெரிந்து கொள்வோம்.
விமானி அறைக்குள் நுழைய அனுமதி
ஏர் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தர இயக்கத் தலைவர் ஹென்றி டோனோஹோவுக்கும் காரணம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமானி தனது பெண் தோழியை விமானி அறைக்குள் நுழைய அனுமதித்ததாக விமானத்தின் பைலட் குழுவைச் சேர்ந்த ஒருவர் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் படிக்க | விமான நிலையத்தில் தொலைந்து போன பூனைக்குட்டி! ஏர் இந்தியா மீது பயணி புகார்!
DGCA வெளியிட்ட அறிவிப்பு
சம்பவம் குறித்து சரியான நேரத்தில் தெரிவிக்காததற்காக ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் விமானப் பாதுகாப்புத் தலைவர் ஆகியோருக்கு ஏப்ரல் 21 ஆம் தேதியே காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக DGCA அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமானியின் இந்த செயல் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை DGCA பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் செயல் என்றும் கூறியுள்ளார்.
டிஜிசிஏ எடுத்துள்ள நடவடிக்கை
விமானியின் பெண் தோழி விமானியின் அறைக்குள் அனுமதிக்கபப்ட்ட வழக்கின் விசாரணையும் தாமதமாகி வருவதாகவும் DGCA அதிகாரி ஒருவர் கூறினார். இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க இரு அதிகாரிகளுக்கும் 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏர் இந்தியா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்த மாதம், விசாரணை முடியும் வரை விமானி குழுவில் உள்ள அனைவருக்கும், விமானம் ஓட்டும் பணி ஒதுக்கப்படக் கூடாது ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ அறிவுறுத்தல்களை வழங்கியது.
மேலும் படிக்க | சைக்கிளில் 20,000 கி.மீ பயணம்.. கை இழந்த இளைஞரின் அசத்தும் செயல்!
உலகத்தரம் வாய்ந்த நிறுவனம்
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியபோதே அதை உலகத்தரம் வாய்ந்த ஏர்லைன் நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாடா குழுமம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஏற்ப தலைமை பொறுப்புகளில் நியமனம், புதிய ஊழியர்கள், அதிக சம்பளம், விமானங்களில் விதவிதமான உணவுகள் என பல்வேறு மாற்றங்களை ஏர் இந்தியா கொண்டுவந்துள்ளது.
மேலும் படிக்க | Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ