இதெல்லாம் டாடா கம்பெனியின் பிராண்டுகளா? இத்தனை நாள் தெரியாமபோச்சே

இவையெல்லாம் டாடா கம்பெனியின் பிராண்டுகளா? இத்தனை நாள் தெரியாம போச்சே

1 /9

டாடா டீ,  டாடா உப்பு, டாடா கெமிக்கல்ஸ், வோல்டாஸ், டைட்டன்ஸ், டிரெண்ட் ஸ்டார் பசார் போன்ற முக்கிய பிராண்டுகள். பலர் ஸ்டார்பக்ஸுக்குச் செல்கிறார்கள், ஆனால் உங்களுக்குத் தெரியுமா, அதுவும் டாடா பிராண்டு தான். 

2 /9

டிசிஎஸ் குழுமமும் டாடா உடையது தான்.  டாடா ஐடி நிறுவனங்கள் அனைத்தும் இதன் கீழ் செயல்படுகின்றன

3 /9

ஆட்டோமொபைல் துறையிலும் டாடா குறிப்பிடத்தக்க பணியை கொண்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் வரை உற்பத்தி செய்கிறது.

4 /9

பிரபலமான பிராண்டுகளில் டாடா ஸ்டீலும் ஒன்று. அவர்கள் வாகன எஃகு, கை கருவிகள், எஃகு குழாய்கள் போன்ற துறைகளில் வேலை செய்கிறார்கள். Tata Power, Tata Projects, Tata Housing, Tata Consulting Engineers, Tata Realty மற்றும் Infrastructure போன்ற குழும நிறுவனங்கள் இத்துறையில் செயல்பட்டு வருகின்றன.

5 /9

டாடா குழுமம் 1919 இல் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மூலம் நிதிச் சேவையில் நுழைந்தது. அவை டாடா ஏஐஏ லைஃப் மற்றும் டாடா ஏஐஜி, டாடா அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி மியூச்சுவல் ஃபண்டுகள், போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சேவைகள், மாற்று முதலீட்டு நிதிகள் மற்றும் ஆஃப்ஷோர் ஃபண்டுகளை வழங்குகின்றன.

6 /9

டாடா குழுமம் 1903 முதல் சுற்றுலா மற்றும் பயணத் துறையிலும் செயல்பட்டு வருகிறது. இந்தியன் ஹோட்டல் நிறுவனம் மூலம் செயல்படுத்தி வருகிறது.டாடா ஏர்லைன்ஸ் தான் ஏர் இந்தியா என்றானது. ஏர் இந்தியா 1956ல் தேசியமயமாக்கப்பட்டு அரசின் கைக்கு வந்தது. இப்போது ஏர் இந்தியா மீண்டும் டாடா குழுமம் வசம் சென்றுள்ளது. 

7 /9

டெலிகாம் துறையிலும் டாடா குழுமம் இருக்கிறது. டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா ஸ்கை மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மூலம் என்ற பெயர்களில் செயல்படுகிறது.

8 /9

டாடா இன்டர்நேஷனல், டாடா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகியவையும் உள்ளன

9 /9

டாடா குழுமம் இந்திய ராணுவத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறது. இது விண்வெளி, யுஏவிகள், ஏவுகணைகள், ரேடார் உள்ளிட்டவைகளை தயாரிக்கிறது. உள்நாட்டு பாதுகாப்பு துறைகளில் டாடாவின் பங்கு முக்கியமானது.