Diwali 2021: ஆஸ்துமாவை பரப்பும் பட்டாசுகளை இந்தியாவுக்கு அனுப்புகிறதா சீனா?
வாட்ஸ்அப்பில் பகிரப்படும் ஒரு செய்தி, சீன தயாரிப்புகளைப் பயன்படுத்தாமல் விழிப்புடன் இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறது.
புதுடெல்லி: இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்திற்காக இந்தியா தயாராகி வருகிறது. மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசு என அனைத்தையும் வாங்கத் துவங்கிவிட்டனர்.
இந்த நிலையில், ஆஸ்துமா (Asthma) மற்றும் கண் நோய்களை ஏற்படுத்தும் பிரத்யேக பட்டாசுகள் மற்றும் விளக்குகளை சீனா இந்தியாவுக்கு அனுப்பி வருவதாக, ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. முக்கியமாக வாட்ஸ்அப்பில் பகிரப்படும் இந்த செய்தி, இந்த சீன தயாரிப்புகளைப் பயன்படுத்தாமல் விழிப்புடன் இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த புலனாய்வு அதிகாரி விஸ்வஜித் முகர்ஜி பெயரில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் ஒரு செய்திக்குறிப்பில், "உளவுத்துறையின் படி, பாகிஸ்தான் (Pakistan) இந்தியாவை நேரடியாக தாக்க முடியாது என்பதால், இந்தியாவை பழிவாங்கும் படி சீனாவிடம் (China) கோரியுள்ளது. இந்தியாவில் ஆஸ்துமாவை பரப்ப, கார்பன் மோனாக்சைட் சிறப்பு வகை பட்டாசுகளை சீனா இந்தியாவுக்கு அனுப்புகிறது.
இது தவிர, இந்தியாவில், கண் நோய்களை உருவாக்குவதற்காக, சிறப்பு மின்னல் அலங்கார விளக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. பல தீங்கு விளைவிக்கும் கூறுகள் இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீபாவளியில் எச்சரிக்கையாக இருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: ISI toolkit: காஷ்மீரை இன்னொரு காபூலாக மாற்ற பாகிஸ்தான் சதி..!!!
இருப்பினும், இந்திய பத்திரிகை தகவல் பணியகம் (PIB) திங்களன்று (அக்டோபர் 18, 2021) இந்த அனைத்து தகவல்களையும் நிராகரித்தது. இவை அனைத்து போலியான தகவல்கள் என இந்த பணியகம் கூறியுள்ளது. அரசாங்கத்தின் உண்மை சரிபார்ப்பு அமைப்பான PIB, உள்துறை அமைச்சகத்தால் அப்படிப்பட்ட தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்று கூறியுள்ளது.
ALSO READ:டி20 போட்டியை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும்: துணை முதல்வர் கோரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR