டி20 போட்டியை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும்: துணை முதல்வர் கோரிக்கை

Pakistan vs india: பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் தரப்பில் இருந்தும் போட்டியை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 18, 2021, 08:53 PM IST
டி20 போட்டியை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும்: துணை முதல்வர் கோரிக்கை title=

பாட்னா: ஜம்மு -காஷ்மீரில் கடந்த பதினைந்து நாட்களில், பீகார் மாநிலத்தை சேர்ந்த நான்கு பேரை பயங்கரவாதிகள் கொன்றனர். இதனால் பீகார் மக்கள் கோபமடைந்துள்ளனர். இதன் காரணமாக டி-20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மோடி அரசின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருக்கும் கிரிராஜ் சிங், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இப்போது பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் தரப்பில் இருந்தும் போட்டியை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 

பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், ஜம்மு -காஷ்மீரில் நடந்து வரும் தொடர் கொலைகள் குறித்து பேசுகையில், என்னைப் பொறுத்த வரை, இதுபோன்ற விஷயங்கள் நிறுத்தப்பட வேண்டும் (வரவிருக்கும் ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி) எந்த விஷயத்திலும் அவர்களுடன் தொடர்புக் கொள்ளக்கூடாத என்றார். 

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடத்த வேண்டுமா? -கிரிராஜ்
இன்று (திங்கள்கிழமை) ஜோத்பூர் சென்ற மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "பயங்கரவாதத்தின் முகம் இப்போது தெளிவாக அம்பலப்படுகிறது. அவர்களின் முகம் இப்போது உலகம் முழுவதும் கொண்டு வரப்படும். ஜம்மு -காஷ்மீரில் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கருத்தில் இவ்வாறு அவர் கூறினார். இது வரும் நாட்களில் நடக்கும். எனவே "இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி நடத்த வேண்டுமா? அதை ஒரு முறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இப்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் நன்றாக இல்லை. இந்தக் கிரிக்கெட் போட்டி அவசியம் தானா என்பதை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ |  JK: பயங்கரவாதிகளின் வெறியாட்டம்; இரு வியாபாரிகள் படுகொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News