நல்வாழ்வை மேம்படுத்தட்டும் - பிரதமர் மோடியின் தீபாவளி வாழ்த்து
தீபாவளி பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பலரும் தங்களது சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி கொண்டாட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். தங்களது வாழ்த்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிவருகின்றனர். அதேபோல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் முதல் அரசியல் கட்சி தலைவர்கள்வரை தங்களது வாழ்த்து செய்தியை கூறிவருகின்றனர்.
அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி பிரகாசம் பிரகாசத்துடன் தொடர்புடையது. இந்த மங்களப் பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒரு அற்புதமான தீபாவளியை கொண்டாடுவீர்கள் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில், “தீபாவளி, ஒரு மகிழ்ச்சியான பண்டிகை. தீபாவளி நாளில், மக்கள் தங்கள் வீடுகளில் லட்சுமியை வழிபட்டு, ஒவ்வொருவரின் மகிழ்ச்சிக்கும், வளமைக்கும் வேண்டிக் கொள்வார்கள். பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்துவதற்கான தருணம்தான் தீபாவளி பண்டிகை. நம் உள்ளும், புறமும் உள்ள அறியாமை இருளை அகற்றும் ஞானத்தை தீபாவளி ஒளி குறிக்கிறது.
மேலும் படிக்க | தீபாவளிக்கு நாயை வணங்கும் நாடு! மகாபாரதத்தை போற்றும் நேபாள நாட்டின் நாய் தீபாவளி
இந்த மங்களகரமான நாளில், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விளக்கு போல், நமது வாழ்க்கையில் ஒளியும், ஆற்றலும் பரவட்டும். நலிந்தோருக்கு உதவும் உணர்வு, மக்களின் மனதில் ஆழ்ந்து வளரட்டும்” என தெரிவித்திருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ