புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் COVID-19 -ன் ஆர்டி / பி.சி.ஆர் சோதனைக்கு (RT/PCR Test) மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் பரிந்துரைச் சீட்டு (Prescription) கட்டாயமில்லை என டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) ஒரு தீர்ப்பை வழங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமானால், மருத்துவரின் பரிந்துரையோ அல்லது கொரோனா அறிகுறிகளோ இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது அது தேவையில்லை. கொரோனா தொற்றுநோயால் நாடு முழுவதும் மக்கள் போராடி வரும் நேரத்தில் தில்லி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.


தில்லி உயர்நீதிமன்றத்தில் (Delhi High Court), நீதிபதிகள் ஹேமா கோஹ்லி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தங்களது தீர்ப்பில், தொற்றுநோய் பரிசோதனைக்கு, டெல்லியின் முகவரி ஆதாரத்திற்கு, ஆதார் அட்டையை (Aadhaar Card) மக்கள் கண்டிப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். இது தவிர, கோவிட் -19 சோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) பரிந்துரைத்த படிவத்தை மக்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.


ALSO READ: ரஷ்யாவில் மக்களுக்கு COVID Vaccine தயார்: இந்தியாவிலும் ஒரு நற்செய்தி!!


டெல்லியில் கொரோனா வைரசல் (Corona Virus) பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தனியார் ஆய்வகங்கள் தாங்களாக கோவிட் சோதனை செய்துகொள்ள விரும்பும் நபர்களுக்கு, ஒவ்வொரு நாளும், 2,000 பேருக்கு COVID-19 சோதனைகளை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளன.


தற்போது தலைநகரில் ஒவ்வொரு நாளும் சுமார் 12,000 பரிசோதனைகள் நடைபெறுகின்றன.


தலைநகர் தில்லியைப் (Delhi) பொறுத்தவரை, இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,93,526 ஆகும். இவர்களில் 1,68,384 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். 20,543 பேர் சிகிசையில் உள்ளனர்.  4,599 பேர் இந்தத் தொற்றுநோயால் இறந்துள்ளனர்.


ALSO READ: நற்செய்தி... கொரோனா தடுப்பூசி இந்த வாரம் முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும்..!