இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவின் இந்த 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் கொரோனா (Coronavirus) பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், குஜராத் (Gujarat) மாநிலம் அகமதாபாத்தில், கொரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்தாக, மாட்டு சாணம் (Cow dung) மற்றும் கோமியத்தை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


ALSO READ | 'மாட்டு சாணம் அனைவரையும் பாதுகாக்கும்' என ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவர் தகவல்!!


மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை வாரத்திற்கு ஒரு முறை உடல் முழுவதும் பூசிக் கொள்வதால் உடலில் கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறியாவது., 


மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை செய்வது, வேறு பல நோய்களுக்கு வழிவகுக்கும். மாட்டு சாணம் கொரோனாவுக்கு எதிரான செயல்திறனை கொண்டிருக்கிறது என்பதற்கான அறிவியல் ஆதாரமும் எதுவும் கிடையாது. கொரோனா வைரஸ் தொற்றை, தடுப்பூசிகளின் மூலமே கட்டுப்படுத்த முடியும். இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்க தலைவர் எசரிக்கை விடுத்துள்ளார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR