சர்வதேச அளவில் மக்களை பீதியில் ஆழ்த்தும் விதமாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்தியவிலும் அதிகம் காணப்படுகிறது. கொரோனா தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வரும் நிலையில், மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாத்திரை டோலோ 650 கோவிட் அலைகளில் மிக அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாத்திரை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூருவை தளமாகக் கொண்ட மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் தயாரித்த டோலோ 650 ஜனவரி 2020 முதல் இதுவரை இல்லாத அளவில் சாதனை அளவிலான விற்பனையை பதிவு செய்துள்ளது. கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வருவதால், டோலோ 650 என்ற மருந்தின் தேவை இது வரை இல்லாத சாதனை அளவாக உள்ளது.


டோலோ-650 ஒரு பிரபலமான வலி நிவாரணி என்பதோடு, காய்ச்சல் - உடல் வலி ஏற்படும் போதும் எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. இதய நோய், சிறுநீரக பிரச்சனை (Kidney Problem), நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, டோலோ-650 மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இது கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் பொதுவாகவே இருக்கும் மருந்து எனலாம்.


ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!


2020 ஆம் ஆண்டு COVID-19 தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து, இந்தியாவில் 350 கோடிக்கும் அதிகமான மாத்திரைகளை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. COVID-19 தொற்றின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரையின் விற்பனையை மும்மடங்காக அதிகரித்துள்ளது.


கொரோனா தொற்றின் மூன்றாவது அலையுடன் இந்தியா போராடி வரும் நிலையில், டோலோ 650, மார்ச் 2020 முதல் இதுவரை ரூ.507 கோடி அளவிற்கு விற்பனையாகி, பாராசெடாமல் மாத்திரையின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
அனைத்து 305 கோடி மாத்திரைகளும் செங்குத்தாக அடுக்கப்பட்டால், அது உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட கிட்டத்தட்ட 6,000 மடங்காக இருக்கும் என்கின்றனர் வால்லுநர்கள். மேலும் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விட 63,000 மடங்கு உயரமாக இருக்கும் என்ற கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.


2019 ஆம் ஆண்டில் கோவிட்-19 பரவுவதற்கு முன்பு, இந்தியா சுமார் 7.5 கோடி டோலோ மாத்திரைகளை விற்றுள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனமான IQVIA வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2021 நவம்பர் 2021 மாதம் வரை, இது 145 மில்லியன் ஸ்ரிப்கள் (2019 ஆம் ஆண்டை விட இரு மடங்கு) அதாவது, 202 கோடி மாத்திரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.


மேலும், டிவிட்டரில் # Dolo650 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது. உருமாறிய கொரோனா வைரஸான 'ஓமைக்ரான்' தொற்று அதிகரித்து வந்தாலும், அதன் பாதிப்பு 'டெல்டா' போன்று பெரியளவில் இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR