BJP-க்கும், காங்கிரஸ்க்கும் எந்த வேறுபாடும் இல்லை. BJP பலனடைய வேண்டும் என்றே காங் விரும்புகிறது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்,  BJP ஓட்டுக்களை பிரிக்க பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதாக பிரியங்கா கூறுகிறார். ஆனால் காங்கிரஸ் எங்கும் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக என்னால் நம்ப முடியவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் கூறி உள்ளார்.


இதுகுறித்து, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ANI செய்தி நிறுவனத்திடம் கூர்கையில்; இந்தியாவிற்கு புதிய பிரதமர் வர வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் விருப்பம். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பிரதமர் குறித்து கட்சி முடிவு செய்யும். அது என் அப்பா முலாயம் சிங்காக இருந்து. அவர் பிரதமரானால் நன்றாக தான் இருக்கும். ஆனால் அவர் பிரதமர் போட்டியில் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.


BJP-க்கும், காங்கிரஸ்க்கும் எந்த வேறுபாடும் இல்லை. BJP பலனடைய வேண்டும் என்றே காங் விரும்புகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் பிற அமைப்புக்களை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதை காங்கிரஸ் இடம் இருந்து தான் BJP கற்றுக் கொண்டுள்ளது. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி, பா.ஜ.க-வின் 'பி டீம்' என்று காங்கிரஸ், எங்கள் கூட்டணியை BJP கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் கூறுவதையும் ஏற்க முடியாது. எங்களை யாரும் கட்டுப்படுத்தவில்லை. நாங்கள் அரசியல் கட்சிகள். எங்களின் கூட்டணி உத்திரபிரதேசத்தில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பா.ஜ.க-வின் மோசமான அரசியலை எங்கள் கூட்டணி தடுத்து நிறுத்தும் என அவர் கூறினார். 


மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், லோக்சபாவில் சமாஜ்வாதி MP-க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கிறேன். பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் இடத்தில் நாங்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறனே் என்றார்.