DRDO 2-DG மருந்து அனைத்து கொரோனா திரிபுகளிலும் செயலாற்றுகிறது: ஆய்வு
இந்தியாவில் கண்பிடிக்கப்பட்டு தயாரிக்கப்படும் 2-deoxy-D-glucose மருந்து பவுடர் வடிவில் ஒரு சாக்கெட்டில் வருகிறது இதை தண்ணீரில் கரைந்து வாய்வழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் (Dr.Reddy's) ஆய்வகங்களுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO உருவாக்கிய கொரோனாவிற்கான மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose : 2-DG) ) என்னும் மருந்தின் அவசர கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கண்பிடிக்கப்பட்டு தயாரிக்கப்படும் 2-deoxy-D-glucose மருந்து பவுடர் வடிவில் ஒரு சாக்கெட்டில் வருகிறது இதை தண்ணீரில் கரைந்து வாய்வழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த மருந்தை கொரோனா (Coronavirus) நோயாளிகளுக்கு அளிக்கும் போது, பயன்பாடு மருத்துவ ஆக்ஸிஜனைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்கவும் உதவும்.
இந்நிலையில், COVID-19 மருந்தான 2-DG, கொரோனாவின் அனைத்து வகை திரிபுகளுக்கும் எதிராக செயல்படுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த மருந்தின் மீதான ஆய்வை அன்னத் நாராயண் பட், அபிஷேக் குமார், யோகேஷ் ராய், திவியா வேதகிரி மற்றும் பலர் நடத்தியுள்ளனர். எனினும் இந்த ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்று ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
ALSO READ | Covid-19 Deaths: தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?
COVID-19 இரண்டாவது அலையின் போது, ஏராளமான நோயாளிகளுக்கு, ஆக்ஸிஜன் அளவு குறைந்து, ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோவிட் எதிர்ப்பு மருந்து 2-டிஜி அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இந்த மருந்து ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்பட்டது.
நோயாளியை விரைவில் குணப்படுத்தி, அவர் உடல் நிலை மோசமாகும் வாய்ப்பை குறைப்பதோடு, அவருக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மருத்திற்கான மூலக் கூறுகள் உள்நாட்டில் கிடைக்கும் பொதுவான மருந்து பொருட்கள் என்பதால், இதன் உற்பத்தியும் எளிது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ALSO READ | COVID-19 Death: அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு 2வது சிங்கம் பலி
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR