கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா-வில் "ரோம்ஸ்ட் 2" ரக விமானத்தினை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி-யின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தினை மையப்படுத்தி, கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சலாக்கெரில் உள்ள ஏரோனாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்ச் (ATR) தளத்தில் "ரோம்ஸ்ட் 2" ரக விமானத்தினை வெற்றிகரமாக செலுத்தியது.


அதிக சக்திவாய்ந்த இயந்திரத்துடன் கூடிய பயனர் உள்ளமை கொண்ட முதல் விமானம் என்பதால், இந்த விமானம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த விமானம் செலுத்தப்பட்ட போது அனைத்து அளவுருக்களும் சாதாரணமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின.



பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (R&D) மற்றும் DRDO தலைவர் எஸ். கிறிஸ்டோபர், ஏரோனாட்டிகல் சிஸ்டம் இயக்குனர் ஜெனரல் சி.பி.ராமநாராயணன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Rustom-2 ஆனது Rustom-1 க்கு பின்னர் ஏழு ஆண்டுகள் கழித்து வந்துள்ளது. Rustom-2 ஆனது அமெரிக்க தயாரிக்கப்பட்ட ப்ரெடரேட்டர் ட்ரோன் உடன் ஒப்பிடுகையில், 24 மணி நேரம் நீட்டித்து பறக்க இயலும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு, கண்காணிப்பு கருவிகளுடன் சேர்த்து ஆயுதங்களை எடுத்துச்செல்லும் திறன் படைத்தது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.