சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நடந்த கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. போதையில் இருந்த மருத்துவர்,  மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து பெண் நோயாளியை தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. https://zeenews.india.com/tamil/topics/Chhattisgarh


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது அந்த வீடியோ வைரலானதை அடுத்து, மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பி மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் விளக்கம் கோரியுள்ளது. 


பாதிக்கப்பட்ட பெண், அதே மாவட்டத்தில் உள் கெர்வானி கிராமத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் மகன் ஷ்யாம் குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,"எனது தாயார் சுக்மதியின் உடல்நிலை, அன்று இரவு மிகவும் மோசமடைந்தது. 


மேலும் படிக்க | நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்கள்... மனம் பதற வைக்கும் CCTV காட்சிகள்!


இதையடுத்து, அவசர உதவி எண்களான 108 மற்றும் 112 ஆகியவற்றுக்கு அழைத்தேன். ஆனால், அவசர ஊர்தி வர சற்று நேரம் எடுக்கும் என அவர்கள் கூறினர். தொடர்ந்து, எனது தாயாரின் உடல்நிலை மோசமாகிவந்ததால், ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு தனது தாயை அந்த மருத்துவர் அடித்தார். இதை எதிர்த்து நான் அந்த மருத்துவரிடம் கேட்டபோது, என்னை அமைதியாக இருக்கும்படி கூறினார். 



இதுதொடர்பாக, அந்த மருத்துவக்கல்லூரியின் டீன் அவினாஷ் மெஷ்ராம் கூறுகையில்,"இந்த சம்பவம் எங்கள் கவனத்திற்கு வந்த உடன், இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி, மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மேலும், விசாரணைக்கு பிறகு அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார். 


மேலும் படிக்க | தேர்வு ஹால் டிக்கெட்டில் சன்னிலியோன் புகைப்படம் - அதிர்ச்சியடைந்த பெண்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ