மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்கள் 8 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளதன காரணமாக,  மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பரவல் ( Corona Virus) எதிரொலியாக, காங்கிரஸ் கட்சியின் சார்ப்பாக பிரச்சாரம் செய்த அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi), தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார். மற்ற தலைவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்வதாக இடதுசாரி கட்சித் தலைவர்களும் அறிவித்தனர். 
மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், தனது பிரச்சார உத்தியை மாற்றி அமைத்துள்ளது. பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கு பதிலாக சிறிய அளவிலான கூட்டங்களை நடத்தப் போவதாக அக்கட்சி தலைவர்,  முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.


இதை அடுத்து பாஜகவும் தேர்தல் பிரச்சார உத்தியை மாற்றி அமைத்துள்ளது. மீதமுள்ள 3 கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தை, பிரம்மாணடமான அளவில் இல்லாமல், சிறிய அளவில், அதாவது சுமார் 500 முதல் 1000 பேருக்கு அதிகமான அளவில் இல்லாமல் மக்கள் கூடும் வகையில் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதுவரை, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதமர் மோடி (PM Narendra Modi) , உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கூட்டங்களிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

ALSO READ | Shocking: 5 மாநிலங்களில் 23% தடுப்பூசிகள் வீணாயின, பட்டியலில் தமிழகம் முதலிடம்


இதனிடையே, மேற்கு வங்கத்தில் மீதமுள்ள மூன்று கட்ட வாக்குபதிவினை, ஒரே நாளில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மம்தா பேனர்ஜீ விடுத்த கோரிக்கை பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அது சாத்தியமில்லை என  கூறியுள்ளது.


நேற்று கொரோனா பரவல் தொடர்பாக மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது கடமைகளை சரியாக செய்து, தடுப்பூசி செயல்முறையை வெற்றியடையச் செய்ய வேண்டும். அனைவரும், பாதுகாப்பாக இருங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து, கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெறவும் அனைவரின் உதவியும் நாட்டுக்குத் தேவை” என குறிப்பிட்டார். 
மேலும், “சென்ற ஆண்டு நமக்கு இந்த தொற்று புதியதாக இருந்தது. அப்போது நம்மிடம் இதை எதிர்த்து போராட் ஒரு ஆயுதமும் இல்லை. இப்போது, நம்மிடம் இதற்கான மருந்து உள்ளது, தடுப்பூசிகள் உள்ளன, வழிமுறைகள் உள்ளன. ஆகையால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.” என்றார். 


ALSO READ | நாட்டில் தற்போதைக்கு முழு ஊரடங்கு அவசியமில்லை: பிரதமர் மோடி
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR