மேற்குவங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மம்தா பேனர்ஜியின் ஆடியோ

மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பேனர்ஜி போட்டியிடுகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 27, 2021, 07:43 PM IST
  • ஆடியோ மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை தோற்கடிப்பேன் என்று சுவேந்து அதிகாரி சவால்.
  • ஆடியோவில் இருவரும் வங்காள மொழியில் பேசுகின்றனர்
மேற்குவங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மம்தா பேனர்ஜியின் ஆடியோ title=

மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தலில் (WB Assembly Election) முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியிருக்கும் நிலையில், நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரஸுக்காக (Trinamool Congress) தேர்தல் வேலை செய்யுமாறு வற்புறுத்தி மம்தா பானர்ஜி தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக பாஜக பிரமுகர் வெளியிட்டுள்ள, தொலைபேசி உரையாடல் ஆடியோ மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக இருந்த நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பேனர்ஜி (Mamatha Banerjee) போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக சார்பில் முன்னாள் அமைச்சரும், ஒரு காலத்தில் மம்தாவுக்கு நெருக்கமாக திகழ்ந்தவருமான சுவேந்து அதிகாரி  களத்தில் உள்ளார்.  இருவருக்குமே இது வாழ்வா சாவா போராடம் தான். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை தோற்கடிப்பேன் என்று சுவேந்து அதிகாரி சவால் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் நந்திகிராம் தொகுதியில்,  சுவேந்து அதிகாரிக்கு பணியாற்றும், பாஜக (BJP) தலைவர் பிரனாய் லால் என்பவரை முதல்வர் மம்தா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தலில் தனக்கு வேலை பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக பாஜக தலைவர் பிரனாய் லால் வெளியிட்டுள்ள அந்த ஆடியோவில் இருவரும் வங்காள மொழியில் பேசுகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த  பிரனாய் லால் , “நான் திரிணாமுல் காங்கிரஸுக்கு  திரும்பி வந்து, தனக்காக தேர்தல் வேலை செய்ய வேண்டும் என்று மம்தா கூறினார், ஆனால் நான் மறுப்பு தெரிவித்தேன். சுவேந்து அதிகாரியுடன் நான் நீண்ட நாட்களாக இருக்கிறேன். நந்திகிராமில் கம்யூனிஸ்ட் கட்சியின் அராஜகத்தில்  என்னை பாதுகாத்த சுவேந்து அதிகாரிக்கு துரோகம் செய்ய மாட்டேன். தற்போது பாஜகவில் இருக்கிறேன். சுவேந்து அதிகாரியை வெற்றி பெற செய்வேன்.” எனக் கூறினார்.

மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது, இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

ALSO READ |அசாம், மேற்கு வங்கத்தில் துவங்கியது சட்டமன்றத் தேர்தல்களின் முதல் கட்ட வாக்குப்பதிவு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News