கோ ஃபர்ஸ்ட் விமானம் நெருக்கடி காரணமாக, ​​விமானப் பயணிகளின் சிரமம் அதிகரித்துள்ளது. கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தனது அனைத்து பட்ஜெட் விமான சேவைகளையும் மே 12 வரை ரத்து செய்துள்ளது. இதற்குப் பிறகு, சில குறிப்பிட்ட விமான வழி தடங்களில் விமானக் கட்டணம் வேகமாக உயர்த்தப்பட்டதால் பயணிகள் கலக்கமடைந்துள்ளனர். இந்த விமானக் கட்டண உயர்வு நீண்ட காலத்திற்கு தொடரும் என்று தொழில்துறையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Go First Airline நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ( NCLT) திவால் மனுவை தாக்கல் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமானக் கட்டணம் நான்கு முதல் ஆறு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது


இண்டிகோ மற்றும் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா, ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா ஆகியவை GoFirst ஏர்லைன் பங்கு அடிப்படையில் பின்தங்கியுள்ளன. Go First நெருக்கடிக்குப் பிறகு, சில வழித்தடங்களில் பயணிகள் கட்டணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. வெவ்வேறு வகையில் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், டெல்லியிலிருந்து மும்பைக்கான கட்டணம் கடந்த நாட்களில் வழக்கமான கட்டணத்தை விட 37 சதவீதம் அதிகமாக இருந்தது. இதுமட்டுமின்றி, சில வழித்தடங்களில் கட்டணம் நான்கு முதல் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.


விமானத் துறையில் ஏகபோக நிலை உருவாகும்


மே 5 ஆம் தேதியின் புள்ளிவிவரங்களைப் பற்றி கூறினால், சராசரி டெல்லி-லே விமான கட்டணம் ரூ.4,772. அதனுடன் ஒப்பிடுகையில், அன்றைய கட்டணம் ரூ.26,819 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், சண்டிகர்-ஸ்ரீநகருக்கான சராசரி பயணிகள் கட்டணம் ரூ.4,047 என்ற அளவில் இருந்து ரூ.24,418 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, ஸ்ரீநகர்-சண்டிகர் வழித்தடத்தில் விமானக் கட்டணம் ரூ.26,148 ஆக அதிகரித்துள்ளது. கோ ஃபர்ஸ்ட் திவால் நிலை காரணமாக இந்திய விமானப் போக்குவரத்து துறையில் ஏகபோக நிலை உருவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது வரும் காலங்களில் பயணிகளுக்கு நல்லதல்ல எனவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | காக்பிட்டில் தோழியை உபசரித்த விமானி... ஏர் இந்தியாவுக்கு DGCA நோட்டீஸ்!


தனியார் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் ஃப்ளைட் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. விமான சேவை வழங்குவதற்கான செலவுகள் மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்க  வேண்டி என்சிஎல்டியில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதனுடன், மே 5 க்கு முன்பும் பின்னர் மே 12, 2023 க்குள் அதன் விமானத்தை ரத்து செய்ய விமான நிறுவனம் தகவல் வெளியிட்டது.


கோ ஃபர்ஸ்ட் சுமார் 53 விமானங்களை கொண்டு இந்தியாவில் சுமார் 34 இடங்களுக்கு விமான போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. இதோடு தினமும் சராசரியாக 200க்கும் மேற்பட்ட விமான பயணங்களை கோ பர்ஸ்ட் மேற்கொண்டு வருகிறது. 200-க்கும் மேற்பட்ட தினசரி விமானங்கள் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டதால் கோ ஃபர்ஸ்ட் வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.


மேலும் படிக்க | அடுத்த 2 நாட்களுக்கான விமானங்கள் அனைத்தையும் ரத்து செய்த Go First ஏர்லைன்ஸ்!


முன்னதாக, கோ பர்ஸ்ட் விமானத்திற்கான என்ஜின் தயாரிப்பாளர்கள் P&W 'அவசர நடுவர் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்ததால்' திவால் நிலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விமான நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில்,  ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் 10 இன்ஜின்களை வழங்கவும் மேலும் 2023 இறுதி வரை மாதம் 10 இன்ஜின்களை வழங்கவும் உத்தரவிட்டது. இந்த நேரத்தில் உதிரி குத்தகை இயந்திரங்கள் எதுவும் கிடைக்காததால், பிராட் & விட்னி இதுவரை  ‘சேவை செய்யக்கூடிய உதிரி குத்தகை இயந்திரங்களை வழங்கத் தவறிவிட்டது’ என்றும் Go First கூறியது.


2022 நிதியாண்டில் அதன் மிகப்பெரிய அளவில் வருடாந்திர இழப்பை பதிவு செய்ததில் இருந்து நிதி திரட்டுவதில் பணவசதி இல்லாத ஏர்லைன்ஸ் போராடி வருகிறது. கோபர்ஸ்ட் உரிமையாளர்களான வாடியா குழுமம், பெரும்பான்மையான பங்குகளை விற்க அல்லது நஷ்டமடைந்த நிறுவனத்தை முழுவதுமாக விற்க மூலோபாய கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற செய்தியும் முன்னதாக வெளியானது.


மேலும் படிக்க | 55 பயணிகளை ‘விட்டு’ சென்ற Go First விமானம்! ரூ.10 லட்சம் அபராதம் விதித்த DGCA


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ