புதுடெல்லி கடும்பனி காரணமாக, அனைத்து விமானங்களும் நிறுத்தம்...
புதுடெல்லியில் நிலவும் கடும் பனி காரணமாக புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!
புதுடெல்லியில் நிலவும் கடும் பனி காரணமாக புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!
வட இந்திய மாநிலங்களில் குளிர்காலம் துவங்கிய நாள் முதல் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகின்றது. இதன் காரணமாக இன்று காலை 7.30 முதல் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டிருந்து அனைத்து விமானங்களும் விமான நிலயத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி உள்பட வட மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை / வெளிச்சம் குறைபாடு காரணமாக போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 12 ரயில்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஏற்பட்ட புழுதி புயல் காரணமாக, காற்று மாசு அதிகரித்துள்ளது. டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது.