புதுடெல்லி: அசாமில் இன்று காலை (ஏப்ரல் 28) ரிக்டர் அளவுகோலில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. எமக்குக் கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் அசாமில் தோன்றி அசாம் முழுவதும், வடக்கு வங்காளத்திலும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை உயிர் இழப்பு மற்றும் சொத்து இழப்பு குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
நில அதிர்வு மையத்தின் படி, அசாமின் (Assam) தேஸ்பூரில் பூகம்பத்தின் மையப்புள்ளி இருந்தது. நிலநடுக்கவியல் மையத்தின்படி, அசாமில் தேஸ்பூருக்கு மேற்கே 43 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


முதலில் தொடங்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஒன்று காலை 8:13 மணியளவிலும், மற்றொன்று 8:25 மணிக்கும், மூன்றாவது 8:44 மணிக்கும் ஏற்பட்டன. ரிக்டர் அளவுகோலில் முறையே 4.0, 3.6 மற்றும் 3.6 என மூன்று நில அதிர்வுகளின் அளவுகள் அளவிடப்பட்டன.


பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) அசாம் முதல்வர் சோனோவாலுடன் தொலைபேசியில் தொடர்பு கொளண்டார். பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்களைப் பற்றி கேட்டறிந்த அவர், அசாமுக்கு அனைத்து வித உதவிகளையும் ஆதரவையும் அளிப்பதாக உறுதியளித்தார். 



ALSO READ: இன்று முதல் 18+ அனைவரும் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம்


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), ஊடகங்களுடன் பேசியபோது, ​​"நிலநடுக்கத்திற்குப் பிறகு, அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவாலுடன் பேசியுள்ளேன். அசாமின் சகோதர சகோதரிகளுடன் மத்திய அரசு ஆதரவாக நிற்கும்" என்று கூறினார். 


இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது.


முன்னதாக, நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில், "அசாமில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. விவரங்களுக்காக காத்திருக்கிறோம்" என்று அசாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்வீட் செய்தார். 



ALSO READ: Watch Shocking video: சிகிச்சை கிடைக்காமல் பெண் உயிரிழப்பு, வன்முறையில் ஈடுபட்ட உறவினர்கள்


குவஹாத்தியில் வசிப்பவர்களில் சிலர் ட்விட்டரில் நிலநடுக்கத்தின் வீடியோவை பகிர்ந்தனர். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.  சுவர்கள் இடிந்து விழுந்ததையும், ஜன்னல்களின் சேதங்களையும் இவற்றில் காண முடிகிறது.