இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம்: உதவிக்கரம் நீட்டிய பிரஞ்சு அதிபர்

கோரோனா தொற்று திடீரென அதிகரிப்பதை சமாளிக்க, இந்தியாவுக்கு உதவ பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் முன்வந்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 23, 2021, 09:04 PM IST
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • பிரான்சு இந்திய மக்களுடன் உள்ளது - இம்மானுவேல் மாக்ரோன்.
  • இந்தியாவில் இருந்து வரும் மக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

Trending Photos

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம்: உதவிக்கரம் நீட்டிய பிரஞ்சு அதிபர் title=

பாரிஸ்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல இடங்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் இருப்பது பீதியைக் கிளப்புகிறது. இதற்கிடையில், கோரோனா தொற்று திடீரென அதிகரிப்பதை சமாளிக்க, இந்தியாவுக்கு உதவ பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் முன்வந்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் பிரான்ஸ் இந்தியாவுடன் இருக்கிறது: இமானுவேல்

இம்மானுவேல்  மாக்ரோன் கூறுகையில், 'இந்தியாவில் கோவிட் -19 தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரான்ஸ் இந்தியர்களுடன் உள்ளது என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த போராட்டத்தில் பிரான்ஸ் உங்களுடன் உள்ளது. இந்த தொற்றுநோய் உலகில் யாரையும் விடவில்லை. உங்களுக்கு ஆதரவாக இருக்க நாங்கள் தயாராக உள்ளோம்." என்றார்.

ALSO READ: COVID-19 Update: இந்தியாவில் 3,32,730 பேருக்கு தொற்று உறுதி; 2,263 பேர் பலி!

இந்தியாவில் இருந்து பிரான்சுக்குச் செல்வோர் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு (Coronavirus) மத்தியில், இந்தியாவில் இருந்து வரும் மக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் கனடா ஆகியவை இந்தியாவை சிவப்பு பட்டியலில் வைத்து, இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சம் 32 ஆயிரம் 730 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 2263 பேர் இறந்ததாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,62,63,695 ஆக உயர்ந்துள்ளது. 1,86,920 பேர் இந்த கொடிய வைரசுக்கு ஆளாகி இறந்தனர். 

நாட்டில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்தது

புள்ளிவிவரங்களின்படி, கோவிட் -19 (COVID-19) தொற்றுநோயிலிருந்து இதுவரை நாடு முழுவதும் 1,36,48,159 பேர் குணமாகியுள்ளனர். இருப்பினும், கடந்த சில நாட்களில், மீட்பு விகிதத்தில் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது. அது 83.92 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் 24,28,616 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 14.93 சதவீதமாகும்.

ALSO READ: உடனடியாக தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News