மத்திய கல்வி அமைச்சர் ரமெஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை ரமேஷ் போக்ரியால் ட்விட்டர் செய்தி மூலம் உறுதிபடுத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்வி அமைச்சகத்தின் அனைத்து பணிகளும் வழக்கமான முறையில் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அவரது உடல்நலம் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர், "இன்று எனக்கு கொரோனா தொற்று (Coronavirus) உறுதி செய்யப்பட்டது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். எனது மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் மருந்துகளை எடுத்துக்கொண்டு சிகிச்சையில் உள்ளேன். சமீபத்தில் எனது தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதித்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.


This is to inform you all that I have tested COVID positive today. I am taking medication & treatment as per the advice of my doctors.
Request all those who have come in my contact recently to be observant, and get themselves tested.


— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) April 21, 2021
 


ALSO READ: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு கொரானா தொற்று 


நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் தடுப்பூசி (Vaccination) செயல்முறை முழு முனைப்புடன் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தொற்றின் எண்ணிக்கையும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.


தொற்றை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. 


முன்னதாக, கோவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 19), செவ்வாய் முதல் ஆறு நாட்களுக்கு தேசிய தலைநகரில் முழுமையான ஊரடங்கு (Lockdown) அமலுக்கு வரும் என அறிவித்தார். ஏப்ரல் 19, திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் துவங்கிய முழு ஊரடங்கு, ஏப்ரல் 26 காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.


டெல்லியில் தொடந்து சில நாட்களாக ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 25,462 என்ற ஒற்றை நாள் எண்ணிக்கையை டெல்லி பதிவு செய்த அடுத்த நாள் டெல்லி அரசு முழு ஊரடங்குக்கான முடிவை எடுத்தது.


ALSO READ: முதல்வர் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி: தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் முதல்வர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 


செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR