COVID-19 நோயாளிகளுக்கு 50% படுக்கைகளை ஒதுக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கைகளில் 50% கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஒதுக்குமாறு அரசு உத்தரவு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 21, 2021, 12:10 PM IST
COVID-19 நோயாளிகளுக்கு 50% படுக்கைகளை ஒதுக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு title=

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு ஆபத்தான முறையில் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் கிராம சுகாதார சேவைகள் இயக்குநர் செவ்வாய்க்கிழமை, தமிழகத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கைகளில் 50% கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஒதுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசாங்கத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றவும், தினசரி அறிக்கையை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கவும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

மருத்துவ மற்றும் கிராம சுகாதார சேவைகளின் இயக்குநர் கூறுகையில், "கொரோனா பரவலின் இரண்டாவது அலையில் தொற்றுநோய் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்துள்ளதால் மருத்துவமனையில் நோயாளிகள் (COVID-19 Patients) அனுமதிக்கப்படுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த தொற்றுநோயை எதிர்த்து அரசு நிறுவனங்கள் போராடி வரும் வேளையில், தனியார் மருத்துவமனைகளும் பங்களிப்பு செய்கின்றன.

ALSO READ |  18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி- மத்திய அரசு அறிவிப்பு!

ஆனால், தற்போதைய சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மொத்த படுக்கைகளில் குறைந்தது 50 சதவீதத்தை  COVID-19 நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக ஒதுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன.

அனைத்து தனியார் மருத்துவமனைகளும் (Private Hospitals) தினசரி அறிக்கையை அந்தந்த மாவட்டத்தின் மருத்துவ மற்றும் கிராம சுகாதார சேவைகளின் இணை இயக்குநர் / இயக்குநரிடம் தவறாமல் சமர்ப்பிக்கவும், கொரோனா குறித்து தேவையான விவரங்களை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும் எனவும் கூறினார். 

தமிழ்நாடு 10,986 புதிய  தொற்று மற்றும் 48 இறப்புகள் பதிவான நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியது. செவ்வாயன்று சென்னையில் (COVID Cases in Chennai) அதிக எண்ணிக்கையிலான தொற்று பதிவாகியுள்ளன. அடுத்த அதிகபட்ச பாதிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் 1029 புதிய கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. 

ALSO READ |  TN Corona Update: கடந்த 24 மணி நேரத்தில், 10,986 பேருக்கு COVID-19 தொற்று

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 10,986 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,13,378 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 79,804 பேர் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல நேற்று 6,250 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 9,20,369 ஆக உள்ளது.  தமிழகத்தில் இதுவரை இறப்பு எண்ணிக்கை 13,205 ஆக உயர்ந்துள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News