புதுடெல்லி: வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மூவர்ணக்கொடியை ஏற்றிவைக்க உள்ள நிலையில், 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தேசிய தலைநகர் டெல்லி தயாராகி வருகிறது. இதற்கிடையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியரசுத் தலைவரின் உரை இரவு 7 மணி முதல் ஆகாஷ்வானியின் தேசிய ஒலிபரப்பு சேவையிலொ ஒளிபரப்பப்படும் மற்றும் அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் இந்தியில் ஒளிபரப்பப்படும் என்று ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது. செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாடு முழுவதிலுமிருந்து "சிறப்பு விருந்தினர்களாக"  சுமார் 1800 பேர் கலந்து கொள்கின்றனர். செவ்வாய்க்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, செங்கோட்டையின் அரண்மனையிலிருந்து நாட்டு மக்களுக்கு வழக்கமான உரையை ஆற்றுகிறார்.


செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட இந்த சிறப்பு விருந்தினர்களில் 660க்கும் மேற்பட்ட துடிப்பான கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் அடங்குவர்; வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் திட்டத்திலிருந்து 250 பேர்; பிரதான் மந்திரி கிசான் சம்மான் என்னும் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டம் பெறும் பயனாளிகள், பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா பயனாளிகள் 50 பேர், புதிய பாராளுமன்ற கட்டிடம் உட்பட மத்திய விஸ்டா திட்டத்தின் 50 கட்டுமான தொழிலாளர்கள், காதி தொழிலாளர்கள், எல்லைச் சாலைகள் அமைப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள், அமிர்த சரோவர் மற்றும் ஹர் கர் ஜல் யோஜனா என்னும் வீடுகள் தோறு குடிநீர் வழங்கு திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோரும் தலா 50 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | சுதந்திர தின விழா! 1,800 சிறப்பு விருந்தினர்கள்... வீடு தோறும் மூவர்ணக்கொடி... !


மார்ச் 12, 2021 அன்று அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்னும் விழா நிறைவும் செவ்வாய்கிழமை நடைபெறும்.


தில்லி காவல்துறை போக்குவரத்து வெளியிட்டுள்ள அறிவிப்புகள்


தில்லி போலீஸார் செவ்வாய்கிழமை நகரில் சீரான வாகன இயக்கத்தை உறுதிசெய்ய போக்குவரத்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். செங்கோட்டையைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கான போக்குவரத்து காலை 4 மணி முதல் காலை 10 மணி வரை மூடப்படும். இது அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே திறக்கப்படும். எட்டு சாலைகள் -- நேதாஜி சுபாஷ் மார்க், லோதியன் சாலை, எஸ்பி முகர்ஜி மார்க், சாந்தினி சௌக் சாலை, நிஷாத் ராஜ் மார்க், எஸ்பிளனேட் சாலை மற்றும் நேதாஜி சுபாஷ் மார்க்கிற்கான அதன் இணைப்புச் சாலை, ராஜ்காட்டில் இருந்து ஐஎஸ்பிடி வரையிலான ரிங் ரோடு மற்றும் ஐஎஸ்பிடியிலிருந்து ஐபி ஃப்ளைஓவர் வரை வெளிவட்டச் சாலை. -- செவ்வாய்கிழமை பொதுப் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருக்கும்.


அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செல்ஃபி பாயிண்டுகளும் தேசிய தலைநகர் முழுவதும் 12 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. "கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 15-20 முதல் MyGov போர்ட்டலில் பாதுகாப்பு அமைச்சகத்தால் ஆன்லைன் செல்ஃபி போட்டி நடத்தப்படும். மக்கள் 12 நிறுவல்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் செல்ஃபி எடுத்து அவற்றை MyGov தளத்தில் பதிவேற்றம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். போட்டியில் ஒவ்வொரு பாயிண்டில் இருந்தும் பன்னிரண்டு வெற்றியாளர்கள், ஆன்லைன் செல்ஃபி போட்டியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு தலா ₹ 10,000 பரிசுத் தொகை வழங்கப்படும்" என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | வருகிறது சுதந்திரம் தினம்... இது 76ஆவது ஆண்டா இல்ல 77ஆவதா? - குழப்பமே வேண்டாம் பதில் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ