குஜராத்: 182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதி என 2 கட்டமாக நடைபெற்றது. பின்னர் வாக்குபதிவு நடைப்பெற்ற 6 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு டிசம்பர் 17 அன்று நடைப்பெற்றது. ஆக இந்த தேர்தலில் மொத்தம் 68.41% வாக்குகள் பதிவானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் அணைவரது கவணத்தையும் ஈர்த்துள்ள இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணியளவில் துவங்கி நடைப்பெற்று வருகின்றது.


முடிவுகளின் நேரடி பதிவு கிழே....



18:28 18-12-2017
டெல்லியில் உள்ள பாஜக தலைமை செயலகத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். தலைமை செயலகத்தில் தொண்டர்கள் கோலாகளமாக தங்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்!



 



17:34 18-12-2017


குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக-வின் வெற்றிக்கு, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து!




17:28 18-12-2017


இந்த வெற்றியை நாங்கள் குஜராத் மக்களுக்கு சமர்பிக்கின்றோம்!... அடுத்து வரும் 5 ஆண்டுகளில் எங்களது சிறப்பான ஆட்சியை தொடர்வோம்! - குஜராத் முதல்வர் 



17:07 18-12-2017
குஜராத்தில் பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்!




இரு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து நாடு முழுவதும் பாஜக-வினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இதைக்குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். நல்ல நிவாகம், நாட்டின் மேம்பாட்டிற்கான ஆதரவாக தேர்தல் வெற்றி உணர்த்துகிறது. பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மதிக்கிறேன். மக்கள் சேவைக்காக அயராது பணியாற்றுவேன். பாஜக வெற்றி பெற உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் தலை வணக்குகிறேன் என கூறியுள்ளார்.


 




 



இரு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து நாடு முழுவதும் பாஜக-வினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை கழகத்திற்கு பாஜக தலைவர் அமித் ஷா சென்றார். அங்கு அவருக்கு மலர்கள் தூவி உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.


 



 



 


 



 



மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைக்கேடு நடந்துள்ளது. சூரத், ராஜ்கோட், அஹமதாபாத் உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்களில் (EVM) முறைக்கேடு நடந்துள்ளது. மின்னணு வாக்கு இயந்தரத்தில் முறைக்கேடு செய்து குறைந்த வாக்கு வித்தியசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என குஜராத் சட்டசபை தேர்தலைக் குறித்து ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.


 



 



39980 வாக்கு வித்தியாசத்தில் குஜராத் முதல்வர் வேட்பாளர் விஜய் ரூபானி வெற்றி பெற்றுள்ளார். இவர் ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இந்திரனில் ராஜகுரு 59635 வாக்குகள் மட்டும் பெற்றார். ஆனால் விஜய் ரூபானி 99615 வாக்குகள் பெற்றார்.



காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி பதவியேற்ற பிறகு, காங்கிரஸ் கட்சி குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் சட்டசபை தேர்தலை சந்தித்தன. இரு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதால், அவரை விமர்சிக்கும் விதமாக, தனது முதல் இன்னிங்ஸில் ஜீரோ எடுத்த ராகுல்காந்தி என கோவா முதல்-அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்


 



 



பாரதிய ஜனதா கட்சி இரு மாநிலங்களில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று டெல்லியில் உள்ள பாராளுமன்றத்திற்கு வருகை வந்துள்ளார்.


 



 


 



"இந்த வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது, இந்த வெற்றிக்கு காரணம் நாட்டின் வளர்ச்சிக்காக நல்ல திட்டங்களை கொண்டு வந்ததால் தான். மத்திய அரசின் திட்டங்களுக்கு மக்கள் கொடுத்தா அங்கீகாரம். இந்த வெற்றிக்கு தொண்டர்களும் முக்கிய காரணம். யார் வெற்றி பெற்றார்களோ அவர்களே வெற்றியாளன் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினர்


 



 



பாஜக 101 இடங்களில், காங்கிரஸ் மீது 74 இடங்களிலும் , பாரதிய பழங்குடி கட்சி 2, NCP 1 மற்றும் சுயாட்சி வேட்பாளர்கள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். 


 



 



இரு மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை பாஜக வகிப்பதால், அதனை அவரது தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மகிழ்ச்சியில் தலைநகரம் டெல்லியில் கூடினர்.


 



 


 



 



தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 100 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 70 இடங்களில் முன்னணியில் உள்ளது. 


 



 



டெல்லியில் உள்ள பாராளுமன்றத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி. அப்பொழுது தனது கை உயர்த்தி வெற்றி என்று காட்டுகிறார். அதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.


 



 


 



 



தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 98 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 70 இடங்களில் முன்னணியில் உள்ளது.


 



 



கடந்த தேர்தலை விட தற்போது அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கூறியுள்ளார். மேலும் பாஜக-வுக்கு கடந்த தேர்தலைக் காட்டிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.



தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 96 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 63 இடங்களில் முன்னணியில் உள்ளது. 


 



 



#GujaratVerdict : ஆட்சியை தக்க வைக்க பாஜக-வுக்கு வாய்ப்பு!! பாஜக 94 ; காங்கிரஸ் 64 




தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 94 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 64 இடங்களில் முன்னணியில் உள்ளது. 


 



 



தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 83 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 62 இடங்களில் முன்னணியில் உள்ளது. 


 



 



குஜராத் கச் மாண்ட்வி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷக்திசிங் கோஹில் 1355 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.


 



 



ராஜ் கோட்டை மேற்கு தொகுதியில் பாஜக முதல்வர் வேட்பாளர் விஜய் ரூபனி 7600 ஓட்டு பெற்று முன்னணியில் உள்ளார்.


 



 



தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 77 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 59 இடங்களில் முன்னணியில் உள்ளது. 


 



 



தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 65 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 56 இடங்களில் முன்னணியில் உள்ளது.


 



 



தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 56 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 50 இடங்களில் முன்னணியில் உள்ளது. NCP- பாரதிய பழங்குடி கட்சி 1 இடத்திலும் முன்னணி வகிக்கிறது


 



 



தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 48 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 40 இடங்களில் முன்னணியில் உள்ளது.


 



 


 



பிஜேபி வேட்பாளர் நிதீஷ்பாய் பட்டேல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்


 



 



தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 37 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 30 இடங்களில் முன்னணியில் உள்ளது. 


 



 



தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 17 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 18 இடங்களில் முன்னணியில் உள்ளது.


 



 



குஜராத்தில் எழுச்சி பெரும் காங்கிரஸ். தற்போதைய நிலவரப்படி  காங்கிரெஸ் 13, பாஜக 10 இடங்களில் முன்னிலை..


 



 


 



காங்கிரஸ் வேட்பாளர் 1300 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை..


 



 


 



ஹிமாச்சலபிரதேச மாநிலத்தில் பிஜேபி 11 இடங்களில் முன்னணி; காங்கிரசில் 4, மற்றவை 1


 



 


 



குஜராத்தில் போர்பந்தர் மற்றும் பாவ்நகர் கிழக்கு ஆகிய 2 இடங்கள் பா.ஜ.க. முன்னிலை; மாண்ட்வி & நதியாட் ஆகிய 2 இடங்கள் காங்கிரஸ் , முன்னணிலை..


 



 


 



தற்போது நிலவரப்படி இரு மாநிலங்களில் பாஜக முன்னிலை. வகிக்கிறது..




 தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்ற நிலையில், தற்போது குஜராத்தில் EVM மெஷின் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது.



 



தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்ற நிலையில், தற்போது EVM மெஷின் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது.


 



 



பாஜக முதல்வர் வேட்பாளர் விஜய் ரூபனி  ராஜ் கோட்டை மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  முதல்வர் வேட்பாளர் விஜய் ரூபனி முன்னிலை வகிக்கிறார்.



தற்போது நிலவரப்படி இரு மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.




குஜராத் வடோத்ராவில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறுகிறது 




ஹிமாச்சலபிரதேச மாநிலத்தின் ஷிம்லா பகுதிக்கு உட்பட்ட கஸ்மும்ப்டி மையத்தில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறுகிறது  



 




குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 
 



 


  


.................................................................................................................................................................................................................................................................................................................................


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது!


நாடுமுழுவதும் அணைவரது கவணத்தையும் ஈர்த்துள்ள இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணியளவில் துவங்கவுள்ளது, எனவே சுமார் 11 மணியளவில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்பது குறித்து கணிப்புகள் வெளியாகிவிடும்.


குஜராத்: 182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதி என 2 கட்டமாக நடைபெற்றது. பின்னர் வாக்குபதிவு நடைப்பெற்ற 6 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு டிசம்பர் 17 அன்று நடைப்பெற்றது. ஆக இந்த தேர்தலில் மொத்தம் 68.41% வாக்குகள் பதிவானது.


பாஜக-வின் கோட்டை என கருதப்படும் குஜராத்தில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக-வும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் பல யுக்திகளை கையாண்டு வாக்குகளை சேகரித்தன. காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக-வும், மதவாதம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பாதிப்புகளை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியும் பரப்புரை செய்தனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 52 கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 1,828 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.


இமாச்சலப் பிரதேசம்: 68 தொகுதிகள் கொண்ட இமாச்சல் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் நாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 


இமாச்சல் முதல்வர் வீரபத்ரசிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் தலைமையில் பாஜக அணியும் கடுமையாக மோதின. இரு கடசியினரும் கடுமையான பரப்புரைகளை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.


மொத்தம் 338 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் சுமார் 75% வாக்குகள் பதிவாகின. 



முன்னதாக, இத்தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளில் இருமாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் என குறிப்பிட்டிருந்தன. இந்நிலையில் இரு மாநிலங்களின் வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளதால், தேர்தலின் முடிவுகள், ஊடகங்களின் கருத்துகணிப்பை உறுதிபடுத்துமா? இல்லையா? எனும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!