பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்...டாக்டர் சுபாஷ் சந்திரா பேச்சு!
Dr Subhash Chandra Talks About Press Freedom : டாக்டர் சுபாஷ் சந்திரா, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக எழும் அச்சுறுத்தல்களை எதிர்த்து ஒன்றினைவோம் என பேசியிருக்கிறார்.
Dr Subhash Chandra Talks About Press Freedom : நான்காவது தூணாக மீடியா கருதப்பட்டாலும், ஆளும் வர்கத்தால் அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறது. அரசின் பலத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுப்பதால், அச்சுறுத்தல் மூலம் பத்திரிகைகளில் உண்மை தகவல் வெளியாவது தடுக்கப்படலாம். அப்படிதான் ஜீ குழுமத்தால் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் நேர்காணல் செய்யப்பட்டார். அதில் சில பகுதிகளை ஆட்சேபனம் இருந்ததால் ஆசிரியல் குழு எடிட் செய்து ஒளிபரப்பியது.
அதற்காக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜீ நியூஸ் குழுமத்தை முழு பேட்டியையும் ஒளிபரப்பவில்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார். இப்போது ஜீ இந்த சிக்கலை சந்திக்கிறது. நாளை வேறு எந்த ஒரு ஊடகமும் இதனை சந்திக்கலாம். கடந்த மே 3-ம் தேதி, அதாவது உலக ஊடக சுதந்திர தினத்தன்று சுபாஷ் சந்திரா தைரியமாக ஊடக சுதந்திரம் குறித்து பேசிய வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. ஒரு சில செய்தி சேனல்கள், பத்திரிகைகள், சமூக வலைதளம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் தங்கள் மீது விழும் அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காமல் இருப்பது துரதிஷ்டவசமானது.
இதனால் தான் இந்தியா ஊடக சுதந்திரத்தில் 159வது இடம் பிடித்துள்ளது. இயற்கையாக இந்த பழி அரசாங்கம் மீது சுமத்தப்பட்டாலும், ஊடகங்களுக்கும் சம அளவு பொறுப்பு உள்ளது.
ஜீ மீடியா பின்பற்றும் முக்கிய விஷயங்கள்!
* ஜீ மீடியா எப்போதும் மற்ற ஊடகங்களுக்கு தனது வேலையின் மூலம் ஒரு முன் உதாரணமாக இருக்கும்.
* அரசாங்கத்துக்கு தைரியமாக உண்மையை எடுத்துச் சொல்வோம்
* முக்கியமாக மக்கள் பிரச்சனை குறித்து பேசுவோம். அது அரசாங்கத்தை விமர்சிப்பதாக இருந்தாலும் சரி.
* அரசாங்கத்தால் தேவையற்ற அழுத்தத்தை சந்தித்தால் நாடு முழுவதும் சமூக வலைதள பிரச்சாரத்தின் மூலம் எடுத்துரைப்போம்.
* எப்போதும் பத்திரிகையாளர்களுக்கு அழுத்தத்தை கையாளவும், ஒருமைப்பாட்டை பின்பற்றவும் பயிற்சி அளிக்கிறோம்
* தேவைப்பட்டால் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டால், பொது நல வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்.
-ஜீ குழும நிறுவனர் டாக்டர். சுபாஷ் சந்திரா பேசியவை.
மேலும் படிக்க | எஸ்சல் குழுமம் விரைவில் கடனில் இருந்து விடுபடும்: டாக்டர் சுபாஷ் சந்திரா பேட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ