PINEWZ: ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன் புதிய செயலியை அறிமுகம் செய்தார் டாக்டர். சுபாஷ் சந்திரா

Hyper Local App PINEWZ: எஸ்ஸல் குழுமத்தின் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை எம்பியுமான டாக்டர். சுபாஷ் சந்திரா, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் இந்த புனித தருணத்தில் போது ஹைப்பர் லோக்கல் செயலியான PINEWZ ஐ அறிமுகப்படுத்தினார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 22, 2024, 04:48 PM IST
  • புதிய செயலியை அறிமுகம் செய்தார் எஸ்ஸல் குழுமத்தின் தலைவர் டாக்டர். சுபாஷ் சந்திரா.
  • அயோத்தியில் இருந்து செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.
  • இந்த செயலி PINEWZ என்று அழைக்கப்படும்.
PINEWZ: ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன் புதிய செயலியை அறிமுகம் செய்தார் டாக்டர். சுபாஷ் சந்திரா title=

எஸ்ஸல் குழுமத்தின் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை எம்பியுமான டாக்டர். சுபாஷ் சந்திரா, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் இந்த புனித தருணத்தில் போது ஹைப்பர் லோக்கல் செயலியான PINEWZ ஐ (Hyper Local App PINEWZ) அறிமுகப்படுத்தினார். கிராமம் முதல் நகரம் வரை, நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த செயலியில் செய்திகள் தெரியும். இந்த செயலியை அறிமுகம் செய்த சுபாஷ் சந்திரா, ​​இன்று மிகவும் சிறப்பான நாள் என்று கூறினார். 

இந்தியா மற்றும் உலக வரலாற்றில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக இருக்கும். சிலர் அயோத்தியில் உள்ளனர், மீதமுள்ளவர்கள் இந்த வரலாற்று தருணத்தை தங்கள் வீடுகளில் இருந்து காண்பார்கள். இந்தப் செயலியில் உங்கள் நகரம் அல்லது பகுதியின் செய்திகளையும் வீடியோக்களையும் பதிவேற்றலாம். இன்று PINEWZ தொடங்கப்படுவதாகவும், டிஜிட்டல் துறையில் இது ஒரு பெரிய புரட்சியாக இருக்கும் என்றும் டாக்டர் சுபாஷ் சந்திரா கூறினார்.

மேலும் படிக்க | மணியோசை, வாத்திய இசை, வானிலிருந்து மலர் மழை.... சொர்க்கமாக காட்சி தரும் அயோத்தி!!

அயோத்தியில் இருந்து செயலியை அறிமுகப்படுத்தியபோது, ​​டாக்டர் சுபாஷ் சந்திராவும் வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த செயலி மூலம் நாட்டின் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் பத்திரிகையாளர்களாக மாற முடியும் என்று அவர் கூறினார். இந்த செயலியை பயன்படுத்தி, உங்கள் நகரம் மற்றும் பகுதியின் செய்திகள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றி, அதாவது அப்லோட் செய்து, உலகம் முழுவதும் அனுப்பலாம். இந்த செயலியின் மூலம் உங்கள் நகரம் மற்றும் கிராமம் பற்றிய செய்திகள் உலகம் முழுவதும் சென்றடையும். 

மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை https://play.google.com/store/apps/details?id=com.mai.pinewz_user கிளிக் செய்யவும் மற்றும் PINEWZ இணையதளத்தை பார்வையிட www.pinewz.com என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க | ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அத்வானி வரவில்லை... காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News