கனடா தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்க இந்தியா முடிவு
தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை வெளியிட்டார்.
இதை அடுத்து வெளியுறவு அமைச்சகம் கனடா நாட்டின் உயர் ஆணையரை வரவழைத்து, கனடா அதிபர் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை வெளியிட்ட விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்தது. இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட உரிமையில்லை என எச்சரித்தது.
இந்நிலையில், நாளை கனடா (Canada) தலைமையில், நடைபெற உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S Jaishankar) கனடா தலைமையில் வீடியோ கான்பரென்சிங்ம் மூலம் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என கூறப்படுகிறது.
கனடா மார்ச் 15 முதல், பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர்களுடன் வீடியோ கான்பரென்சிங் மூலம் ஆலோசனை கூட்ட்டங்களை மேற்கொண்டுள்ளது - இது வரை இதுபோன்ற 11 ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளன. நவம்பர் 3 ம் தேதி, கனடா நடத்திய கோவிட் -19 (COVID-19) தொடர்பான, அமைச்சர் ஒருங்கிணைப்புக் குழுவின் 11 வது கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
ஆனால், தற்போது, கனடா அத்துமீறி, இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதால், இந்த கூட்டத்தை இந்தியா (India) புறக்கணிக்கிறது. இதை அடுத்து நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
ALSO READ | புதிய நாடாளுமன்ற கட்டிடம்: டிசம்பர் 10ம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டுவார்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR