போபாலில் கண் பார்வையற்ற மாணவர்கள் போரட்டம்!!
போபாலில் வேலைவாய்ப்பு வசதி செய்துதர வேண்டி கண் பார்வையற்ற மாணவர்கள் கடந்த ஆறு நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போபால் மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும்,இந்தியாவின் 16 ஆவது மிகப்பெரிய நகரமும், உலகின் 134 ஆவது பெரிய நகரமுமாகும்.இந்த பகுதியியை சேர்ந்த மாணவர்கள் கடந்த கடந்த ஆறு நாட்களாக சாலைகளில் அமர்ந்து மாநில அரசாங்கத்திற்கு எதிராக போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தொழிற்சங்க தலைவர் மணீஷ் கூறுகையில்; எங்கள் பகுதியில் எராளமான கண் பார்வையற்ற மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்து கொண்டிருக்கிறோம்.
மாநில அரசாங்கம் வேலைவாய்ப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை எங்கள் போரட்டம் தொடரும் என்றார்.