விவசாயிகள் போராட்டம்: நாளை விவசாயிகளின் முக்கிய அறிவிப்பு வெளியாகும்
Farmers Protest: தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பிப்ரவரி 29ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
Farmers Protest: விவசாயிகளின் டெல்லி பேரணி குறித்து விவசாய தலைவர்கள் நாளை அறிவிப்பை வெளியிடுவார்கள். இன்று விவசாய சங்க தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நாளை அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியை நோக்கிய விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 13 அன்று நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அந்த பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் பஞ்சாப் எல்லையில் உள்ள கனௌரி மற்றும் சம்பு எல்லையில் முகாமிட்டுள்ளார்கள்.
தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பிப்ரவரி 29ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். குறைந்தபட்ச ஆதரவு விலக்கான சட்டப்பூர் உத்திரவாதம் மற்றும் தங்களது பிற கோரிக்கைகளுக்கு ஆதரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர். தங்களது கோரிக்கைகள் பூர்த்தியாகும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று விவசாயிகளின் தலைவர் சர்வம் சிங் பந்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் டெல்லி காவல்துறை திங்கட்கிழமையன்று ஹரியானாவின் சிங்கு மற்றும் டிகிரி எல்லையில் உள்ள சர்வீஸ் பாதைகளை திறந்தது. விவசாயிகளின் டெல்லி சலோ பேரணிக்கான தற்காப்பு நடவடிக்கையாக இந்த பாதைகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இதுகுறித்து கூறிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், 'சிங்கு மற்றும் டிகிரி எல்லையில் சனிக்கிழமை முதல் சர்வீஸ் பாதைகளை திறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் பாதைகளை திறந்து விட்டால் உள்ளூர் மக்களின் போக்குவரத்தில் ஏற்பட்டிருந்த சிரமங்கள் நீங்கிவிடும்' என்று தெரிவித்தார். எனினும், காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினர் 24 மணி நேரமும் இந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தத்தில் இருந்து விவசாயத் துறையை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தின் இரண்டு நாட்களுக்கு முன்னதாக பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர்கள் மாநாடு அபுதாபியில் திங்கள்கிழமை தொடங்கியது. இது பிப்ரவரி 29 வரை நடைபெறும். இந்த மாநாட்டிற்கு எதிராக விவசாயிகள் திங்கள்கிழமை 'உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறு' தினத்தை அனுசரித்தார்கள்.
விவசாயிகளின் கோரிக்கைகள்:
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தத்தில் இருந்து விவசாயத்தை விலக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான ஒரு சட்டம் (Minimum Support Price - MSP), விவசாயக் கடன் தள்ளுபடி (Farmers Loan Waiver), சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | இமாச்சல பிரதேசத்தில் குழப்பம்.. ஆட்சி கவிழுமா..? 15 பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ