Farmers Protest: உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தை விவசாயிகள் எதிர்க்க காரணம் என்ன?

Farmers Protest: WTO ஒப்பந்தத்திலிருந்து விவசாயத்தை விலக்க வேண்டும் என்று கூறிய விவசாயிகள், இந்த ஒப்பந்தம் விவசாயிகளின் நிலையை மேலும் சிக்கலாக்கும் என்றும், இது விவசாயத்திற்கு ஆபத்தை அதிகரிக்கும் என்றும் கூறினர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 27, 2024, 03:27 PM IST
  • WTO உடன்பாடு நிலைமையை மோசமாக்கும்: விவசாயிகள் கருத்து.
  • WTO கொள்கையில் எம்எஸ்பி வழங்கப்படுமா?
  • விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?
Farmers Protest: உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தை விவசாயிகள் எதிர்க்க காரணம் என்ன?

Farmers Protest: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான ஒரு சட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தங்களது பல கோரிக்கைகளுக்காக விவசாயிகள் கடந்த சில நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தத்தில் இருந்து விவசாயத் துறையை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தின் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். கிசான் மஜ்தூர் மோர்ச்சா, ஐக்கிய கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய சங்கங்களின் விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு அங்கமாக உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தத்தில் இருந்து விவசாயத் துறையை விலக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் தினத்தை (WTO Quit Day) நேற்று மிகுந்த கோபத்துடன் அனுசரித்தனர்.

Add Zee News as a Preferred Source

உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர்கள் மாநாடு அபுதாபியில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இது பிப்ரவரி 29 வரை நீடிக்கும். இந்த மாநாட்டிற்கு எதிராக விவசாயிகள் திங்கள்கிழமை 'உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறு' தினத்தை அனுசரித்தார்கள். 

விவசாயிகளுக்கு கிடைக்கும் மானியங்களை முழுமையாக ரத்து செய்வதே உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organisation) நோக்கம் என்று கூறிய விவசாய தலைவர்கள், இதை கடைப்பிடித்தால் இந்திய விவசாயிகளுக்கு அதிகப்படியான நஷ்டம் ஏற்படும் என்று கூறினார்கள். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைமையில் டிராக்டர் பேரணி நடத்தி WTO அமைப்பின் உருவ பொம்மைகளை எரித்தார்கள். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பல இடங்களில் விவசாயிகள் திங்கள்கிழமை வன்முறை போராட்டங்களை நடத்தினர். விவசாயிகள் நெடுஞ்சாலையில் டிராக்டர்களை வைத்து சாலைகளை மறித்து பல்வேறு பேனர்களை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

மேலும் படிக்க | பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தலைவர் விஜய் சேகர் சர்மா ராஜினாமா..!!

WTO உடன்பாடு நிலைமையை மோசமாக்கும்: விவசாயிகள் கருத்து

WTO ஒப்பந்தத்திலிருந்து விவசாயத்தை விலக்க வேண்டும் என்று கூறிய விவசாயிகள், இந்த ஒப்பந்தம் விவசாயிகளின் நிலையை மேலும் சிக்கலாக்கும் என்றும், இது விவசாயத்திற்கு ஆபத்தை அதிகரிக்கும் என்றும் கூறினர். இதை விவசாயிகளும் நுகர்வோரும் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

WTO கொள்கையில் எம்எஸ்பி வழங்கப்படுமா?

விவசாயிகளின் எதிர்கால நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்த அகில பாரதிய கிசான் சபா பகுதி துணைத் தலைவர் ஷம்ஷேர் சிங், உலக வர்த்தக அமைப்பின் (WTO) கொள்கைகளால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) கிடைக்காத நிலை உள்ளது என்று கூறினார். குறிப்பிட்ட சில பயிர்களுக்கு மட்டுமே விவசாயிகளுக்கு அரசு MSP வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தத்தில் இருந்து விவசாயத்தை விலக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான ஒரு சட்டம் (Minimum Support Price - MSP), விவசாயக் கடன் தள்ளுபடி (Farmers Loan Waiver), சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | மாநிலங்களவை தேர்தல்: வாக்குப்பதிவில் ட்விஸ்ட் இருக்குமா? பாஜக வலையில் சமாஜ்வாதி எம்எல்ஏக்கள்?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News