Farmer`s protest: விவசாய சட்டங்களை தள்ளிப்போடும் அரசின் யோசனை வெற்றிபெறுமா?
விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை தள்ளிப்போட்டு, இடைநிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போதுமானதாக இருக்குமா?
புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் பல நாட்களாக தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. அரசின் பத்து கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எந்தவித முடிவும் எட்டப்படாமல் தேக்க நிலை நீடித்துவந்தது. தற்போது 11வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேசுவார்த்தையில், சில காலத்திற்கு விவசாய சட்டங்களை (Farm Laws) அமல்படுத்துவதை தள்ளிப்போட்டு, இடைநிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போதுமானதாக இருக்குமா?
மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நிலவியதற்கு காரணம் விவசாயப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் உறுதியாக இருந்ததும், கோரிக்கைகளில் சமரசம் செய்ய மறுத்ததும் தான் என்று கூறப்படுகிறது.
Also Read | பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3-4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்
அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா (Hannan Mollah), தற்போது மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ளார். டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராட்டங்களைத் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகின்றன. இந்த முட்டுக்கட்டைக்கு தீர்வு காண விவசாய சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், முதல் முறையாக விவசாயிகளுக்கும் (Farmers), அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், சுமார் 18 மாதங்களுக்கு சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்ற மத்திய அரசின் முன்மொழிவு குறித்து விவசாய தலைவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் சகாக்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவை தெரிவிப்பதாக தெரிவித்தனர். ஜனவரி 22 ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தங்கள் முடிவை சொல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை அரசுடன் நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்ட விவசாயி தலைவர் ஷிசிவ்குமார் கக்கா (Shivkumar Kakka), அரசாங்கத்தின் முன்மொழிவை வரவேற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவை தாங்கள் நம்பவில்லை என்று கூறும் அவர், ஆனால் அரசாங்கத்தின் இந்த முன்மொழிவின் மீது நம்பிக்கை ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
Also Read | கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் SII-ன் ஆலையில் தீ விபத்து
"அனைத்து விவசாயத் தலைவர்களும் இது குறித்து விவாதித்து ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்தில் அரசாங்கத்திற்கு பதிலளிப்பார்கள்” என்று அவர் கூறுகிறர்..
18 மாதங்களுக்கு சட்டங்களை ஒத்திவைப்பதாக ஒப்புக்கொண்டு, உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை விவசாய சங்கங்களில் ஒன்றின் தலைவர் தர்ஷன் பால் சிங் (Darshan Pal Singh) தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த முன்மொழிவை கருத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கருதுகிறார்.
அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளர் ஹன்னன் மொல்லா-வும் (Hannan Mollah) அரசாங்கத்தின் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளார்.
Also Read | பராக்கிரம தின விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கொல்கத்தா பயணம்..!!
விவசாய சட்டங்களை சில காலம் ஒத்திவைக்க முன்வருவதாக இன்று (புதன்கிழமை, ஜனவரி 21) நடைபெற்ற 11 வது சுற்று பேச்சுவார்த்தையில், மத்திய அரசு தெரிவித்தது. விவசாயிகள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டுக் குழு ஒன்று அமைக்கப்படுவதாகவும், இந்தக் குழு ஒரு முடிவை எட்டும் வரை மூன்று சட்டங்களும் செயல்படுத்தப்படாது என்றும் அரசாங்கத் தரப்பில் விவசாயிகளிடம் கூறப்பட்டது. இது தொடர்பாக ஒரு முடிவுக்கு குழுவுக்கு 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்படும்.
"பேச்சுவார்த்தைகளின்போது, ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளாக விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று நாங்கள் கூறினோம். விவசாய சங்கங்கள் இதை மிகவும் தீவிரமாக ஆலோசிப்பதாக சொன்னது மகிழ்ச்சியளிக்கிறது. கலந்தாலோசனைக்குப் பிறகு ஜனவரி 22 ம் தேதி தங்கள் முடிவை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்"என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (Union Agriculture Minister Narendra Singh Tomar) கூறினார்.
Also Read | Army பணிக்கு ஆட்சேர்ப்பு தொடங்குகிறது, விவரங்கள் வேண்டுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR