Farmers protest: முதல் முறையாக இன்று அமித்ஷாவை சந்திக்கும் விவசாயிகள்
தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
விவசாயிகள் போராட்டத்தை (Farmers Protest) முடிவுக்கு கொண்டு வர இது வரை நடத்திய ஐந்து சுற்று பேச்சு வார்த்தைகளில் முடிவு ஏதும் ஏற்படாத நிலையில், புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தனர்.
தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) இன்று விவசாயிகளை சந்திப்பார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
இந்திய உழவர் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், “நாங்கள் இன்று மாலை ஏழு மணிக்கு உள்துறை அமைச்சருடன் சந்திப்போம். நாங்கள் இப்போது, சிங்கு எல்லைக்குச் செல்கிறோம், அங்கிருந்து உள்துறை அமைச்சரை சந்திக்க செல்வோம்” என்றார். 13 பேர் கொண்ட விவசாயிகள் குழு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல் முறையாக விவசாயிகளை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | COVID-19 தடுப்பூசி இயக்கத்தில் மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR