Farmers protest: பேச்சுவார்த்தையில் பலன் இல்லை; தொடரும் போராட்டம்..!!
அரசாங்கத்திற்கும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடைபெறும்.
அரசாங்கத்திற்கும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடைபெறும்.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகள் அமைப்புகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்படும். முன்னதாக கூட்டத்தில், மத்திய அரசு (Central Government) சார்பாக ஒரு குழுவை அமைக்க முன்மொழியப்பட்டது, இதனை போராட்டக்காரர்கள் நிராகரித்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தி நிறுவனமான ANI உடன் பேசிய விவசாயி தலைவர் சந்தா சிங், 'எங்கள் போராட்டம் தொடரும். நாங்கள் நிச்சயமாக அரசாங்கத்திடமிருந்து நாங்கள் நிச்சயம் ஏஎதோ ஒன்றை பெறுவோம். அது துப்பாக்கி குண்டானாலும் சரி அல்லது அமைதியான தீர்வானாலும் சரி. மேலும் மீண்டும் மூன்றாம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்வோம்’ என்றார்.
புதிய வேளாண் சட்டங்களை (New Agriculture Laws) திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் பிடிவாதமாக உள்ளனர். விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதி, எங்கள் நிலம் பெரிய கார்ப்பரேட்டுகள் கையில் சென்று விடும். அத்தகைய சட்டத்தை திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கூறினார். முன்னதாக கூட்டத்தில், எம்.எஸ்.பி குறித்து அரசாங்கத்தால் விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர தோமர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பல உழவர் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் (Punjab), ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உ.பி. ஆகிய நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த ஐந்து நாட்களாக, விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுடன் தெருக்களில் போராடுகின்றனர். இன்று அவரது போராட்டத்தின் ஆறாவது நாள்.
முன்னதாக, பாஜக (BJP) தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து, மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது, இதில் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ALSO READ | விவசாயிகளின் போராட்டத்தால் மக்களுக்கு சிரமம்; Haryana-Punjab உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR