புது டெல்லி: புதிய வேளாண் சட்டங்களில் (Farm Bills 2020) சில திருத்தங்கள் மேற்கொள்ள தயார் எனவும், அதற்கான வரைவு முன்மொழிவை பெற்ற பெற்ற சில மணி நேரங்களுக்குள் விவசாய சங்கங்கள் " வரைவு தெளிவற்றவை" என்றுக்கூறி நிராகரித்தன. மேலும் எங்கள் கோரிக்கைகளை பரிசீலினை செய்யவில்லை என்றால், போராட்டங்களை தீவிரப்படுத்துவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். டிசம்பர் 12 ஆம் தேதி ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையைத் (Jaipur-Delhi Highway) தடுப்போம் என்று கூறியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேளாண் சட்டத்தில் கூறப்பட்டு உள்ள எம்.எஸ்.பி. (MSP) வரைவு திட்டங்கள் தெளிவற்றவை. மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும். நாங்கள் தொடர்ந்து போராடுவோம். டெல்லிக்குச் செல்லும் சாலைகளை ஒன்றன்பின் ஒன்றாகத் தடுப்போம் என்று விவசாய சங்கங்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். 


 



மத்திய அரசு கொண்டுவந்த மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு (Farm Laws) எதிராக விவசாயிகள் தொடர்ந்து 14 வது நாளாக கடும்குளிரையும் பொருட்படுத்தாமல்  போராடி வருகின்றனர். தற்போது கொள்முதல் செய்வதற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) தொடரும் என்று "எழுத்துப்பூர்வ உத்தரவாதம்" அளிக்க மத்திய அரசு இன்று முன்மொழிந்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 விவசாய சங்கங்களுக்கு அனுப்பப்பட்ட வரைவு திட்டத்தில், AMPC ஐ வலுப்படுத்த அனைத்து தனியார் மண்டிகளை பதிவு செய்வதாகவும் மத்திய அரசு உறுதியளித்தது.


ALSO READ |  விவசாயிகள் போராட்டம்: பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை; நீடிக்கும் போராட்டம்


இதற்கிடையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) மற்றும் என்சிபி தலைவர் சரத் பவார் மற்றும் இடது தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் டி ராஜா தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு புதன்கிழமை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை (President Ram Nath Kovind)  சந்தித்து புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு ஒரு குறிப்பை சமர்ப்பித்தது. "நாங்கள் ஜனாதிபதிக்கு ஒரு குறிப்பாணை வழங்கியுள்ளோம். முறையான கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகள் இன்றி ஜனநாயக விரோத முறையில் நிறை வேற்றப்பட்ட விவசாய சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த மசோதாவை ரத்து செய்யுமாறு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்" என்று சிபிஐ (எம்) தலைவர் சீதாராம் யெச்சுரி ANI ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.


 



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR