பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமாகும் இது இஸ்லாமியத்திற்குஎதிரான போராட்டம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நரேந்திர மோடி மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா இரண்டாம் சந்திப்புக்கான மாநாடு விஜயன் பவனில் இன்று நடைபெற்றது. 


இந்த மாநாட்டில் இரு தலைவர்களும் இந்தியாவிற்கும், ஜோர்டானுக்கும் சமாதானத்தை கொண்டு வருவதற்கான செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.


அப்போது பேசிய பிரதமர் மோடி:- பயங்கரவாதத்திற்கு எதிரான  போராட்டமாகும் இது இஸ்லாமியம் அல்லது வேறு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல, மாறாக அப்பாவி இளைஞர்களை தவறாக வழிநடத்தும் நபர்களுக்கு எதிரானது என்றார்.




மேலும் அவர், என்னை பொறுத்தவரை, எல்லா மதங்களும் மனித மதிப்புகளை ஊக்குவிக்கின்றன. எனவே, நம் இளைஞர்கள் இஸ்லாமிய மனிதாபிமான அம்சங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும், அப்போது தான் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த கையாள முடியும்", என்று அவர் கூறினார்.