ராணுவ கிடங்கில் தீ விபத்து- பிரதமர் மோடி இரங்கல்
மகாராஷ்டிரா மாநிலம் புல்காவ்னில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர், 20 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே புல்கான் வர்தா என்ற இடத்தில் ராணுவத்திற்கு சொந்தமான பெரிய வெடிமருந்து கிடங்கு உள்ளது. அந்த கிடங்கில் வெடிமருந்து சேமித்து வைத்திருந்தனர். அங்கு இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 வீரர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 2 ராணுவ அதிகாரிகள் காயம் அடைந்துள்ள அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2௦-க்கு அதிகமான வீரர்கள் காயமடைந்துள்ளனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தற்போது தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது என ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்:-
இச்செய்தி வேதனை அளிக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கு விரைவில் குணம் அடைய கடவுளை பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சம்பவ இடத்தை பார்வையிட்டு நிலமையை கண்காணிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.