ஹிமாச்சல் பிரதேசத்தில், மலை ரயில் என்ஜினில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இமயமலை அரசி எனப் பொருள்படும், Himalayan Queen என்ற மலை ரயில், சிம்லா - கல்கா (Kalka - Shimla) இடையே இயக்கப்பட்டு வருகிறது. குமார்ஹாதி - தாரம்பூர் (Kumarhati&Dharampur ) ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த மலை ரயில் வந்து கொண்டிருந்தபோது, என்ஜின் பகுதியில் தீப்பிடித்து கடும் புகைமூட்டம் எழுந்தது.


இதையடுத்து, ஆபத்துகால பிரேக்கை பிடித்து ரயிலை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள், உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர், அந்த என்ஜின் கழற்றிவிடப்பட்டு, மாற்று என்ஜின் மூலம், மலை ரயில், தனது பயணத்தை தொடர்ந்தது. ரயில் என்ஜினில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.