ஊரக பகுதியில் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்தவும்: பிரதமர் மோடி
ஊரக பகுதிகளில், ஆஷா மற்றும் ஆங்கன்வாடி தொழிலாளர்களை ஈடுபடுத்தி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
கொரோனாவின் நிலைமை குறித்து பிரதமர் மோடியின் தலைமையில், உயர்மட்டக் கூட்டம் இன்று நடைபெற்றது.
நாட்டில் கோவிட் -19 (COVID-19) நிலைமையை மறுபரிசீலனை செய்த பிரதமர் மோடி, கிராமப்புறங்களில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த ஒவ்வோரு வீடாக சென்று பரிசோதனை செய்தல், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
ஊரக பகுதிகளில், ஆஷா மற்றும் ஆங்கன்வாடி தொழிலாளர்களை ஈடுபடுத்தி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
கிராமங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஊரக பகுதிகளில், பரிசோதனைகளை தீவிரப்படுத்தி, தொற்றுக்கண்டறிய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார். உள்ளூர் மட்டத்தில் , நோய் கட்டுபாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதே இன்றைய காலத்தின் தேவை என்றார்.
கோவிட் -19 நிலைமை குறித்த மறுஆய்வுக் கூட்டத்தில், சுகாதார ஊழியர்களுக்கு வென்டிலேட்டர்கள் மற்றும் பிற உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு தேவையான பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறினார். மார்ச் மாத தொடக்கத்தில், ஒவ்வொரு வாரமும் சுமார் 50 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதாகவும், இப்போது ஒவ்வொரு வாரமும் சுமார் 1.30 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதாகவும் கூறினார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா தவிர, சுகாதார அமைச்சர் அமித் ஷா தவிர, ஐ.சி.எம்.ஏ அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனின் இரண்டாவது அலைக்கு மத்தியில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி (PM Narendra Modi) தொடர்ந்து பல நிலையில் கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டு வருகிறார்.
சனிக்கிழமை வெளியான தகவல்களின் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் ஒரு நாளைக்கு 3,26,098 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கோவிட் -19 தொற்று மொத்த பாதிப்புகள் 2,43,72,907 ஆக உயர்ந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 3,890 நோயாளிகள் இறந்தனர். நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 2,04,32,898 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தொற்றுநோயால் ஏற்பட்ட இறப்பு விகிதம் 1.09 சதவீதமாக பதிவாகியுள்ளது.
ALSO READ | ரெம்டெசிவிர் மருந்தை வாங்க சென்னையில் அலை மோதும் மக்கள் கூட்டம்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR