அலிகர் முஸ்லிம் பலகைகழகத்தின் முன்னாள் மாணவர் ஃபர்ஹான், "அல்லாவிற்கு எதிரான வகையில் யாரேனும் நடந்து கொண்டால், நாங்கள் அவரது தலையை  வெட்டுவோம்" என்றார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் உறுப்பினராக ஃபர்ஹான் சுபேரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஒவைசியின் (Owaisi) கட்சியில் உறுப்பினராக உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்காக உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள், பிரான்ஸை (France)  தாக்கி பேசி வருகின்றனர்.  


பிரான்சில், முகம்மது நபியின் கார்டூன் வரைபடத்தை வகுப்பில் காண்பித்து கருத்து சுதந்திர பாடம் எடுத்து ஆசிரியர் பட்டப்பகலில் , நடு வீதியில் தலை வெட்டி கொல்லப்பட்டார்.


இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரான்ஸில் (France) தேவாலயத்திற்கு அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர், 'அல்லாஹ் ஹு அக்பர்' என்று கோஷமிட்டபடியே, பெண்ணின் கழுத்தை வெட்டிய சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


ALSO READ | இஸ்லாமோபோபியா அதிகரிப்பதற்கு யார் காரணம்?


இந்நிலையில், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு (Emmanuel Macron)  தமது நாட்டில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல் மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிரான எல்லை தாண்டிய போராட்டத்தை அறிவித்துள்ளனர்.


இந்தியாவின் பல இடங்களில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிரான்சுக்கு எதிராக பேரணிகளை நடத்தினர். இதற்கிடையில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் (AMU) மாணவர் ஃபர்ஹான் சுபேரி, தனது வெறித்தனமான பேச்சினால், மீண்டும் ஒரு முறை விஷத்தைத் தூண்டியுள்ளார்.


CAA மற்றும் NRC க்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஃபர்ஹான் தீவிரமாக பங்கேற்றார். இந்து மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக பிப்ரவரி 12 ம் தேதி சிறைக்குச் சென்றுள்ளார். இந்த வழக்கில், முன்னாள் மாணவர் நிஷித் சர்மா இந்த வழக்கை பதிவு செய்துள்ளார்.


ALSO READ |  | பிரான்சில், அல்லாஹு அக்பர் என பெண்ணின் கழுத்தை வெட்டிய பயங்கர சம்பவம்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR